உடல் நோய், மன நோய், சனி தோஷம் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி தைலாபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உடல் நோய், மன நோய் நீங்க 28.11.2018 முதல் 15.12.2018 வரை தைலாபிஷேகமும் மேலும் 14.12.2018 ல் ஸ்ரீ காயதிரீ ஹோமம், கர்பரக்ஷாம்பிகை ஹோமமும் நடைபெறுகிறது.
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உடல் பிணி மற்றும் உள்ளத்துப்பிணி தீர மூலவர் தன்வந்திரிக்கு தைலாபைஷேக விழா 28.11.2018 முதல் 15.12.2018 வரை காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. மேலும் 14.12.2018 ல் ஸ்ரீ காயதிரீ ஹோமம், கர்பரக்ஷாம்பிகை ஹோமம், 108 சுமங்கலி பூஜையும், 15.12.2018 ல் 108 கலசங்களில் 108 மூலிகை தீரத்த திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி தைலாபிஷேக பலன்கள்
மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன், நல்லெண்ணெயை கொண்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்லெண்ணெய் என்பது எள் விதையிலிரிந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விசேஷ திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகார பிரீத்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமம், எள்ளு எண்ணெய் கொண்டு தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றுவது போன்ற வைபவங்கள் சனி பிரீத்தியாக கருதுகின்றோம்.

இத்தகைய நல்லெண்ணையினால் நோய் தீர்க்கும் க்டவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது.
14.12.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ காயத்ரீ ஹோமத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் 108 சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. தம்பதிகள் நலன் கருதியும், குழந்தை பாக்யம் வேண்டியும், வேதமாதா அருள் கிடைக்கவும், 14.12.2018 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ காயத்ரீ ஹோமம் மற்றும் கர்பரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திரிக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து 108 சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 15.12.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 108 கலசங்களில், 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு ஆராதனை வைபவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பிரசாதம் வழங்கப்பட உள்ளது. தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. தொலைபேசி : 04172 - 230033, செல் – 9443330203.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications