For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாசி மகம் திருநாளில் மகா சண்டி யாகம் கணவன் மனைவி பிரச்சினை தீர்க்கும்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 24.02.2020 திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மங்கள சண்டி யாகமும் மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் 08.03.2020 ஞாயிற்றுகிழமை வரை மஹா சண்டி யாகம் நடைபெற உள்ளது.

இதில் மங்கள இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகினி பைரவர் பலி பூஜை, யாகசாலை பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா பூஜை, பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள், பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், மாங்கல்யம், கொலுசு, மிட்டி போன்ற சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மங்கள சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது.

Maha Chandi Yagam on Maasi Magam

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் மாசி மகத்தை முன்னிட்டு வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் 08.03.2020 ஞாயிற்றுகிழமை வரை மஹா சண்டி யாகம் நடைபெற உள்ளது.

Maha Chandi Yagam on Maasi Magam

மஹா சண்டி யாகம் :

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தன்னுள்ளே அடக்கி உலகத்தை படைத்தவளே அன்னை ஆதிபராசக்தி. அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை காப்பாற்றி, இயற்கையின் சீற்றத்தை தனித்து, மழை பெய்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், அமைதியோடும் என்றென்றும் வாழ அன்னை ஆதிபராசக்தியை குறித்து நட்த்தப்படும் யாகமே சண்டி மஹா யகமாகும்.

Maha Chandi Yagam on Maasi Magam

நவக்கிரக தோஷங்கள், நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு, வழக்குகள், பூர்வஜென்ம தோஷம், கன்யா தோஷம், பித்ரு தோஷம் இதனால் ஏற்படும் திருமணத்தடை, மன அமைதி குறைவு, மனசோர்வு, திருஷ்டி, செய்வினை, துஷ்ட சக்தி தோஷங்கள் மற்றும் நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தயின்மை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, கடன் தொல்லை, எவ்வளவு உழைத்தும் பலன் இல்லாமை, பதவி உயர்வு, குழந்தைகள் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் இவையனைத்திலும் ஏற்படும் தடைகளுக்கு இந்த மஹா யக்ஞத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து தடைகள் நீங்கி சண்டிகா தேவியின் அருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன், ஆரோக்யத்துடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மூலிகைகள், நெய், சமித்துகள், புஷ்பங்கள், சௌபாக்ய பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், மளிகை பொருட்கள், போன்றவை அளித்து குடும்பத்தினருடன் இறை கைங்கரியத்தில் ஈடுபடலாம்.

English summary
6 Homams with Hayagreevar Rakshai for students to get high marks on Annual Exam and Maha Chandi Yagam on Maasi Magam 08.03.2020 Sunday in our Sri Danvantri Arogya Peedam, Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X