2023 புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்..வெற்றிகள் தேடி வரும்!
சென்னை: மிதுனம் ராசிக்காரர்கள் இத்தனை ஆண்டு காலமாக பட்ட துயரங்களுக்கு 2023ஆம் ஆண்டில் விடிவு காலம் பிறக்கப்போகிறது. எந்தப்பக்கம் போனாலும் முட்டுச்சந்தாக இருந்தது. நெருங்கிய உறவினர்களே வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த வாழ்க்கை தேவையா என்று கூற யோசித்து இருப்பீர்கள். இனி பிறக்கப்போகும் புத்தாண்டில் உங்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்தார். இனி சனிபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறார். குரு பகவானும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். ஏற்கனவே ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து நிறைய நற்பலன்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் 2023ஆம் ஆண்டில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு வேலை, கல்வி, குடும்ப வாழ்க்கை, உடல் ஆரோக்கியம், பொருளாதார நிலை எல்லாமே எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுனம்
2023ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடப்போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கடந்த 5 ஆண்டு காலமாகவே கண்டச்சனி, அஷ்டம சனி என படாத பாடு பட்டு கவலைகளில் சிக்கியிருப்பீர்கள். இனி உங்களுக்கு அந்த பிரச்சினை வேண்டாம். வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை பட்டு அதன் மூலம் ஏராளமான படிப்பினைகளை கற்றுக்கொண்டிருப்பீர்கள்.

பணப்பிரச்சினை நீங்கும்
இனி உங்களுக்கு நல்ல காலம்தான். எத்தனையோ சோதனைகள் வந்தாலும் அதை சாதனைகளாக மாற்றக்கூடிய சக்தியை சனி பகவானும், குரு பகவானும் தரப்போகின்றனர். 2023ஆம் ஆண்டு முதலே உங்களுக்கு நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். பட்ட கடன்கள் முடிவுக்கு வரப்போகிறது.
உங்களின் கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வரப்போகிறீர்கள். பணத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகின்றன.

குடும்பத்தில் ஒற்றுமை
மன உளைச்சல் நீங்கப்போகிறது. பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரப்போகின்றன. மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு கல்யாணம் கைகூடி வரும். 2023ஆம் ஆண்டில் மே மாதத்திற்குப் பிறகு திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கைகூடி வரும்.

வேலை கிடைக்கும்
நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. வீடு வாங்கும் யோகம் கைகூடி வரும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கடவுளின் நற்கருணை உங்களுக்கு கைகூடி வரப்போகிறது. நோய்கள் நீங்கப்போகிறது. உங்களின் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications