உங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? - நவகிரகங்களையும் வழிபடுங்க!

நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். அதிலும் முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க வேண்டும்.

நம் உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் என்பது நம்மை பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு அமைப்பு ஆகும். நம் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளையும், தீங்கு செய்யும் உயிரணுக்களையும் அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நம்மை இது பாதுகாக்கிறது. ஆனால் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து அதிகமான தொற்றுநோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும்.

Prayer for Navagraham imporve your immune system

நம் உடலின் சொந்த உயிரணுக்களை (செல்களை) இனம்காண முடியாமல் சில நேரங்களில் நோய் தடுப்பாற்றல் மண்டலம் தன் உடலை தானே சேதப்படுத்தவும் கூடும்.
இந்த தன்தாக்கு (ஆட்டோஇம்யூன்) நோய்கள் நாள்பட்ட வியாதிகளாய் இருப்பதனால் உடலின் பல உறுப்புகளையும் பாதித்து, மரணம் உள்பட பல கொடிய அபாயங்களையும் ஏற்படுத்தும். இந்த நோய்களை முற்றிலும் குணமாக்கவல்ல எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் சமீபகாலம் வரை வழக்கத்தில் இல்லாமல் இருந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உலக தடுப்பாற்றல் விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி உணவுகள்

இந்தியாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய அதுவும் விலை அதிகமில்லாதது....
வைட்டமின் சி உணவுகள் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான வைட்டமின் சி, குருதி வெள்ளையணுக்களை தங்கள் வேலையான தொற்றுக்களை ஆற வைப்பதை வேகமாக செய்ய வைக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். கொய்யாப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடும். ஆகவே ஆரஞ்சு, கொய்யாப்பழம், எலுமிச்சை போன்றவற்றை வாங்கி உட்கொள்ளுங்கள். வைட்டமின் ஈ குறைபாடு இருந்தால் தொற்றுக்களை எதிர்த்து போராடும் நோய் தடுப்பாற்றல் அமைப்பின் திறன் பாதிக்கப்படும். அதனால் வைட்டமின் ஈ அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடலாம்.

ஜோதிட ரீதியான காரணங்கள்

•ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க வேண்டும். லக்னாதிபதி லக்னத்திலேயே நிற்பது சிறப்பு. அதிலும் அவர் ஆட்சியாகவோ உச்சமாகவோ நின்றுவிட்டால் மிக்க பலமிக்கவராவார். அவ்வாறு நிற்க்கும்போது அவருக்கு நோய் தடுப்பாற்றல் இயற்கையாகவே மிகுந்து இருக்கும்.

•ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்க லக்னத்திற்க்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கால புருஷ ராசிக்கு 6/8/12 பாவங்களான கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்பு இருக்க கூடாது. மேற்கண்ட ராசிகள் லக்னமாக இருந்து லக்னாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு.

•ஜெனன ஜாதகத்தின் 6/8/12 தொடர்புகள் மற்றும் ராகு கேதுக்களின் தொடர்பும் லக்னத்திற்க்கு இருப்பது நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

•மேலும் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், திதி சூன்ய ராசியாதிபதிகள் தொடர்பும் நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

•லக்னம் மற்றும் லக்னாதிபதிகள் ம்ருத்யு பாகையில் அமைவதும் நோய் தடுப்பாற்றலை குறைத்துவிடும்.

•ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் உலகிற்கெல்லாம் அளப்பறிய சக்திகளை வழங்குபவன் ஆவான். சூரியனின் நிலை ராகு கேதுவுடன் இணைந்து கிரகண தோஷம் பெறாமலும், 6/8/12 தொடர்புகள் பெறாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை ஜெனன ஜாதக ஆத்ம காரக கிரகத்துக்கும் பொருந்தும்.

• உடம்பு மற்றும் ரத்தத்தின் காரகன் சந்திரன் ஆகும். இவரே மனதிற்கும் காரகன் ஆவார். தன்னம்பிக்கை பெற்று மனோ திடம் நிறைந்திருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்கும்.

•காலபுருஷ ராசியின் லக்னாதிபதி மற்றும் ரத்தத்தின் காரகனான செவ்வாய் பலம் பெற்று இருக்கவேண்டும்.

•உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

•நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

•திரிகோண ஸ்தானங்களில் சுப கிரகங்களும் கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரகங்கள் ஆட்சி பலத்தோடும் நிற்க்க வேண்டும்.

•ஆண்டிபயாடிக் என்பவை ராகு கேதுக்களின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். எனவே ஆண்டி பயாடிக் உபயோகத்தை குறைத்து வருமுன் காக்கும் பழக்க வழக்கத்தை கொள்ளவேண்டும்.

நோய் எதிர்பாற்றல் தரும் பரிகாரங்கள்:

•நோய் எதிர்ப்பாற்றல் பெற குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். அவ்வப்போது அவரவர் குல தெய்வங்களை சென்று வழிபட்டுவருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும்.

•பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரிவர செய்யவேண்டும்.

•நவகிரங்களில் நோய் தடுப்பாற்றலுக்கு அனைத்து கிரகங்களையும் வழிபடவேண்டும் என்றாலும் குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

•தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+