For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனீர் பட்டர் மசாலாவும் பலமான எலும்புகளும்!

பனீரில் செய்த உணவுகளை உண்பவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: பனீர் பாலை திரித்து செய்யப்படும் பொருளாகும். பாலிருந்து வந்தாலும் பால் திரிந்துவிடுவதாலும் அதில் கால்ஷியம் எனும் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் இருப்பதால் சனி இன்றைய நாயகனான சனிதான் பனீர் சீஸ், பாலாடைகட்டி போன்றவற்றின் காரகர் என்கிறது ஜோதிடம்.

சுண்ணாம்பு சத்தின் காரகர் சனைஸ்வரர்தான் என மருத்துவ ஜோதிடம் அதை மேலும் உறுதி செய்கிறது. உங்க குழந்தை ஒரு சாதனையாளராக வரவேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பனீர் எனும் பாலாடை கட்டியில் செய்த உணவுகளை நிறைய சாப்பிட பழகவேண்டும்.

நான் சமீபத்தில் செய்த ஆய்வில் பன்னீர் பட்டர் மசாலா, பனீர் டிக்கா, கடாய் பனீர் மற்றும் பாலக் பனீர் போன்ற உணவுகளை உண்பவர்கள் எல்லோரும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

இது என்னடா புதுக்கதையா இருக்கு! "சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல் இருக்கிறதா? அல்லது அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்மந்தம் போல் உள்ளதா? எப்படி இருந்தாலும் பனீர் சாப்பிடுபவர்கள் சாதனையாளர்கள் என்பதுதான் உண்மை.

பனீர் என்று இந்தியர்களால் அழைக்க‍ப்படும் சீஸில் குறைவான கொழுப்புக்களே காணப்படுகிறது. மேலும் இதில் அதிகளவு புரோட்டீன்கள் இருக்கிறது. ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள‍ நினைப்பவர்கள் இந்த பனீரை அதிகளவில் சமையில்சேர்த்து உணவாக உட்கொண்டு வரலாம். இது ஆண்களுக்குமட்டுமல்ல‍ பெண்களுக்கு உகந்தது.

பனீரில் செய்த உணவுவகைகளில் கால்ஷியம், மெக்னீஷியம், ப்ளோரைட், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்து நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் பலமாகவும் உதவுவதாக அறிவியல் செய்திகள் கூறுகின்றன.

சத்தான உணவு

சத்தான உணவு

கால்சியம் எனும் சுண்ணாம்பு சத்தோடு மெக்னீஷியம், பொட்டாஷியம் ப்ளோரைட் போன்றவை சரி விகிதத்தில் இருந்தால்தான் உறுதியான எலும்புகள் அமையும் என்பது கூடுதலு தகவலாகும். ஜோதிடத்தில் பனீரை பற்றி என்ன கூறுகிறது என பார்ப்போம்.

பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா

பனீர் பாலை திரித்து செய்யப்படும் பொருளாகும். பாலிருந்து வந்தாலும் பால் திரிந்துவிடுவதாலும் அதில் கால்ஷியம் எனும் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் இருப்பதால் சனி இன்றைய நாயகனான சனிதான் பனீர் சீஸ், பாலாடைகட்டி போன்றவற்றின் காரகர் என்கிறது ஜோதிடம். சுண்ணாம்பு சத்தின் காரகர் சனைஸ்வரர்தான் என மருத்துவ ஜோதிடம் அதை மேலும் உறுதி செய்கிறது.

சனிபகவான்

சனிபகவான்

பனீர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களுக்கு சனீஸ்வர பகவான் தான் முதன்மை காரக கிரகம் என்றாலும் அடிப்படையில் பாலில் இருந்து தயாரிப்பதால் சந்திரன் சேர்க்கையும் காரகமும் இருக்கத்தான் செய்கிறது. பனீரில் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுனை செய்யும் மெக்னீஷியம் நிறைந்திருக்கிறது. மெக்னீஷியத்தின் காரகர் சந்திரபகவான் என மருத்துவ ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

எலும்புகள் வளர்ச்சி

எலும்புகள் வளர்ச்சி

எலும்புகளுக்கு சூரியனும் காரகர் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. பனீர் பொருட்களில் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது. பொட்டாஷியம் சத்து இருந்தால்தான் கால்ஷியம் சரியான விகிதத்தில் எலும்பிற்க்கு சென்றடையும். பொட்டாஷியத்தின் காரகர் சூரியன் எனகிறது மருத்துவ ஜோதிடம். பற்கள் மற்றும் எலும்புகள் தேயாமலும் சிதையாமலும் இருக்க ப்ளோரைட் அவசியம் என்கிறது விஞ்ஞானம். பனீர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களில் ப்ளோரைட் நிறைந்திருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். ப்ளோரைடின் காரகர் சனீஸ்வரன்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

யாருக்கு விருப்பம்?

யாருக்கு விருப்பம்?

பனீர் பட்டர் மசாலா, பனீர் டிக்கா, கடாய் பனீர், பாலக் பனீர், பனீர் சான்ட்விச், சீஸ் சான்விச் போன்ற உணவுப்பொருட்களை யார் விரும்பி சாப்பிடுவார்கள் என செய்த ஆய்வில் ஜாதகத்தில் சனி சந்திர சேர்க்கை பெற்றவர்கள் மிக விரும்பி சாப்பிடுவார்கள் என தெரிகிறது.

ஜாதகத்தில் சனி சந்திர சேர்க்கை

ஜாதகத்தில் சனி சந்திர சேர்க்கை

சந்திரனும் சனியும் எந்த ராசியிலும் சேர்ந்து நிற்பது. சந்திரன் வீடான கடகத்தில் சனி நிற்பது. சனி வீடுகளான மகர கும்பத்தில் சந்திரன் நிற்பது. சனி சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோண நக்ஷத்திர சாரம் பெற்று ரிஷப, கன்னி, மகர ராசிகளில் நிற்பது. சந்திரன் சனியின் நக்ஷத்திரங்களான பூசம், அனுஷம், மற்றும் உத்திரட்டாதி நக்ஷத்திரங்களில் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளில் நிற்பது.

புணர்ப்பு தோஷம்

புணர்ப்பு தோஷம்

சனி சந்திர சேர்க்கையை புணர்ப்பு தோஷம் என ஜாதகத்தை மேலோட்டமாக பார்ப்பவர்கள் கூறிவிடுவார்கள். குரு பார்வையின்றி சில குறிப்பிட்ட நிலைகளில் சனி சந்திர சேர்க்கை திருமண வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றாலும் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதுதான் எனது தொடர்ச்சியான ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் சனி சந்திர சேர்க்கை பெற்று நிறைவான திருமண வாழ்க்கையை பெற்றவர்களையும் ஆய்வில் காணமுடிகிறது.

அழகானவர்கள்

அழகானவர்கள்

ஆனால் சனி சந்திர சேர்க்கை பெற்றவர்கள் எல்லோரும் தைரியமானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் சாதனையாளர்கள் என்பதை பல ஜாதகங்கள் உறுதி செய்கின்றது. மேலும் சனி சந்திர சேர்க்கை பெற்றவர்கள் பலர் விதத்தில் ஒல்லியாக அழகான தேக அமைப்புடன் இருக்கின்றனர் என்பது ஆச்சரியமூட்டும் செய்தியாகும்.

பி வி ராமன் ஜாதகம்

பி வி ராமன் ஜாதகம்

நவீன ஜோதிடத்தின் தந்தை என்று போற்றப்படும் மதிப்பிற்குறிய தெய்வத்திரு பி.வி ராமன் ஐயா அவர்களின் ஜாதகத்தில் கும்ப லக்னமாகி லக்னாதிபதி சனி சுகஸ்தானத்தில் சந்திரனின் உச்ச வீட்டில் இனைந்து நின்று ஜோதிட உலகில் சாதனை படைத்து அழியாத நிலையான பேறும் புகழும் பெற்று நிற்பது ஒருபானை சோற்றுக்கு பதத்திற்க்கு ஒரு சோறு பதம் போதுமல்லவா! மேலும் மதிப்பிற்குறிய தெய்வத்திரு பி.வி ராமன் ஐயா அவர்கள் திருமணமானவர் என்பதும் அவருடைய மகள் இன்றும் ஜோதிட உலகில் பறைசானயற்றுவதும் உலகறிந்த விஷயமாகும்.

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

எனவே சனி சந்திர சேர்க்கை பெற்றவர்கள் புணர்ப்பு தோஷம் எனும் தாழ்வு மனப்பான்மையை உதறி தள்ளிவிட்டு சாதனையாளராக போகிறோம் எனும் தன்னம்பிக்கையுடன் சனி சந்திரன் ஆதிக்கம் பெற்ற பனீர் பட்டர் மசாலாவை மேலும் ஒரு தட்டு ஆர்டர் செய்து சனி நாளில் உண்டு மகிழ்ந்து இன்றைய நாளை இனிய நாளாக்குவோமாக.

English summary
Paneer is a good source of protein especially for vegetarians who do not get their intake from meat products. Panneer good for people who weight train as they need protein for muscle building and repair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X