பெண்களை வாட்டும் ரத்தசோகைக்கும் செவ்வாய்க்கு உள்ள தொடர்பு தெரியுமா?

பெண்களை அதிகம் பாதிக்கும் ரத்தசோகை நோய்க்கும் செவ்வாய் கிரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: ஜோதிடத்தில் ரத்தத்தின் அதிபதியாக கூறப்படுபவர் இன்றைய தின நாயன் அதாங்க! மங்களன் எனப்படும் செவ்வாய்தாங்க! ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் எப்படி இருக்கிறார் என்பதை வைத்து அவருக்கு ரத்த சோகை தொடர்பான நோய் ஏற்படுமா என்பதை அறிந்து கொள்ளலாம்.

இரத்தசோகை (Anemia) என்பது உடலில் உள்ள இரத்தத்தில் ஏற்படும் ஒரு குறைபாட்டை குறிக்கிறது. இரத்தத்தில் உள்ள குருதிச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற குறைபாட்டை அல்லது இரத்தத்தில் இருக்கும் குருதிச் சிவப்பணுக்களுக்குச் சிவப்பூட்டும் பொருளான ஹீமோகுளோபின் (Hemoglobin) என்னும் இரத்தப் புரதத்தின் அளவு குறைவாக இருக்கும் நிலையே இரத்தச்சோகை எனப்படும்.

இந்த ஹீமோகுளோபின் ஆனது இரும்புச்சத்தினால் ஆனது. இரும்புச்சத்து போதாத நிலையில் ஹீமோகுளோபினின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் அது ஆக்சிசனுடன் இணையும் திறன் குறைவதாலோ, ஹீமோகுளோபின் உருவாகும் அளவில் ஏற்படும் குறைபாட்டினாலோ இந்த நிலை ஏற்படலாம்.

Remedies and astrology parikaram for Anemia

பெண்கள் பாதிப்பு

இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்கள் ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் ரத்தசோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள்.

பெண் குழந்தைகள்

தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். அதனால், பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.

ரத்தசோகை அறிகுறி

சோர்வு, தூக்கம் வருவது போன்ற உணர்வு, பசியின்மை, எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபட முடியாதது, மூச்சு வாங்குவது, நாக்கு, கண்களின் கீழ் பகுதி, மேலண்ணம் போன்ற இடங்கள் சிவந்த நிறத்தை இழந்து வெளுப்பாக மாறிவிடுவது, விரல் நகம் மேடாக இல்லாமல் தட்டையாக காட்சியளிப்பது போன்ற அறிகுறிகள் ரத்தசோகை இருப்பவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும். ரத்தசோகையின் இந்த அறிகுறிகள் தெரிந்தால் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் சென்று பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

ஜோதிடத்தில் ரத்தத்தின் காரக கிரகம் ரத்த சோகையும்:

ஜோதிடத்தில் ரத்தத்தின் அதிபதியாக கூறப்படுபவர் இன்றைய தின நாயன் அதாங்க! மங்களன் எனப்படும் செவ்வாய்தாங்க! ரத்தத்திலுள்ள ஹீமோக்ளோபின் எனப்படும் இரும்புசத்தின் காரகனும் செவ்வாய்தான் என்கிறது மருத்துவ ஜோதிடம். இளம்பெண்களுக்கும் செவ்வாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க! தனக்கு வரப்போகும் கணவர் இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைக்கேற்ப்ப கணவனை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிட சாஸ்திரம்.

ரத்தமும் செவ்வாயும்

எந்த ஒரு பெண்ணும் வீரமுள்ள ஆண்மகனையே கணவனாக அடைய விரும்புவாள். எனவே வீரத்தை குறிக்கும் கிரகமும் செவ்வாய்தான். ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்துவதும் செவ்வாய்தாங்க.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடம்பை குறிக்கும் கிரகமாகும். செவ்வாய் ரத்தத்தை குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கோசார செவ்வாய் வயது வரும் பருமடைந்தவுடன் லக்னத்தையும் சந்திரனயும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும்போது பருவமடைகிறாள் என மருந்துவ ஜோதிடம் கூறுகிறது.

செவ்வாய் சந்திரன் தொடர்பு

ஒவ்வொரு மாத சுழற்சியில் ஜாதகத்தில் ஜனன செவ்வாயை கோசார சந்திரன் தொடுவதற்க்கு 5 மணி நேரத்திலிருந்தும் சந்திரன் செவ்வாயை கடந்து 5 மணி நேரம் வரையும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம். அதாவது ஒரு ராசியில் சந்திரன் இரண்டரை நாள் பயனம் செய்வார். அவர் ராசியை அடைவதற்க்கு முன்பும் கடந்த பின்புமாக மொத்தம் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதின் காரணம் செவ்வாய் சந்திர தொடர்பே என்கிறது ஜோதிடம்.

ரத்த தொடர்பு

ஒரு பெண்விரும்பாத தருணமான அதிக உதிரப்போக்குடன் கூடிய பெரும்பாடு எனப்படும் மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்துவதும் சந்திரன் செவ்வாய் சேர்க்கைதான். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனையும் ரத்தத்தின் அதிபதியாகவும் கூறப்படுகினறது.

கிரக சேர்க்கைகள்

அசுபத்தன்மை பெற்ற செவ்வாய், தேய்பிறை சந்திரன் சேர்க்கை,செவ்வாய் குரு சேர்க்கை, செவ்வாய் சனி சேர்க்கை கடகத்தில் ஏற்படுவது, சனி சந்திரன் சேர்க்கை, சனி கடகத்தில் நிற்பது, எந்த விதத்திலேனும் புணர்ப்பு தோஷம் பெருவது, சூரியன் சனி சேர்க்கை போன்றவை ரத்த சோகை நோயை ஏற்படுத்தும். அசுபத்தன்மை பெற்ற செவ்வாய் ஹீமோகுளோபின் எனும் இரும்பு சத்தின் அளவை குறைத்து ரத்த சோகையை ஏற்படுத்தும். மீனம் அல்லது 12ம் வீட்டில் செவ்வாய் நிற்பது அல்லது சேர்க்கை பெருவது அதிக உதிரப்போக்குடன் கூடியதும் அதிக வலியுடன் கூடியதுமான மாதவிடாய் ஏற்படுத்துகிறது.

மாதவிடாய் கோளாறு

மலட்டு ராசி மற்றும் காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னியில் செவ்வாய் சந்திர சேர்க்கை ஏற்படும்போது உதிரத்தை வெளிப்படுத்தாத மாதவிடாய் கோளாறு ஏற்படுத்துகிறது. நீச சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் வெள்ளை படுதல் எனும் நோய் ஏற்படுகிறது.

கருப்பை கோளாறுகள்

காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று நீச சந்திரன் மற்றும் சனியோடு சேர்க்கை பெரும்போது கருப்பை கோளாறுகள், கருப்பை அகற்றுதல் ஆகியவை ஏற்படுகிறது.

தெய்வீக ஸ்தலங்கள்:

சிதம்பரத்தை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஒரு சிறந்த செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். செவ்வாய் கிழமைகளில் இந்த திருத்தலத்திற்க்கு வந்து வணங்குவது சிறந்த பரிகாரமாகும். மேலும் ரத்தத்தில் குறைபாடு உள்ளவர்கள் செவ்வாய் எனும் அங்காரகனின் அதிதேவதையான முருகப்பெருமானின் வாகனமான கோழி மற்றும் சேவல் இறைச்சி சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட வேண்டும்.

இரும்பு சத்துள்ள உணவுகள்

முருங்கை கீரை, புளிச்ச கீரை, பேரிச்சம்பழம், கறிவேப்பிலை பொடி போன்றவை இரும்பு சத்து மிகுந்த உணவு வகைகளாகும். இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தித் திறன் அதிகரிக்கிறது. சோர்வு நீங்கும். இரத்த ஓட்டம் சீராகிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும். மேலும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+