உங்க ஜாதகத்தில் புதன் உச்சமா? - புத்திநாதன் புதன் தரும் பலன்கள்

புதன் புத்திநாதன். ஒரு மனிதனின் சிந்தனை, சிந்திக்கும் திறமை, பகுத்தறிவு ஆகிவற்றிர்க்கு எல்லாம் காரணகர்த்தாவாக புதன் திகழ்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சூரியன், புதன் சுக்கிரன் இடம் மாறும் கிரகங்கள்... உங்கள் ராசிக்கு என்ன பலன் ??- வீடியோ

    சென்னை: புதன் என்றாலே புத்திக்கூர்மை ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக அமையப்பெற்றவர் புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம், பேச்சில் வல்லவர், பெரிய விஞ்ஞானி, மேதைகளாக வருவார்கள், தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள். புதன்கிழமையான இன்று புதன் கிரகம் பற்றி அறிந்து கொள்வோம்.

    சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன். இது அலி கிரகம். பச்சை நிறம் கொண்டவர். மகா விஷ்ணுவின் அம்சம். கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

    புத ஆதிபத்திய யோகம்

    புத ஆதிபத்திய யோகம்

    ஜாதகத்தில் புதன் சூரியனுடன் நெருக்கமாக இருப்பின், நிபுண யோகத்தை அளிப்பான். புதனுடன் வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். சனி, செவ்வாய், ராகு-கேது ஆகியோர் இணைந்தால், தனது வலிமையை இழப்பான் புதன், தவறான சிந்தனைகளால், சங்கடத்தைச் சந்திக்கச் செய்வான்.

    புதன் கிரகம்

    புதன் கிரகம்

    மிதுன லக்னத்துக்கு லக்னாதிபதி புதன் லக்னத்தில் இருந்தாலும், உச்ச வீடான கன்னியில் இருந்தாலும் உயர் கல்வி, சொந்த வீடு, வசதியான வாழ்க்கை போன்ற யோக பலன்கள் ஜாதகருக்கு உண்டாகும்.
    புதிய வித்தைகளில் ஜொலிப்பார். வாதம் விவாதங்களில் யாரும் இவரை வெல்லுவது கடினம், நகைச்சுவை உணர்வு, காதல் உணர்வும் மிக்கவர், சுக்ரனோடு சேரும் போது வலிமை மேலும் அதிகரிக்கும்.

    புத்திசாலி

    புத்திசாலி

    கன்னியில் இருக்கும் போது புதன் உச்ச பலமும் பெறுகிறார் சாமர்த்தியசாலி சூழலுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியும், புகழும் பெறுவார். தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு துறைகளில் ஜொலிப்பார்.

    நரம்பு கோளாறுகள்

    நரம்பு கோளாறுகள்

    புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். புதன் வக்ரமாக இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது. புதன் பாதிக்கப்பட்டால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஞாபக மறதி, உணர்ச்சியற்றுப்போதல், கை, கால்கள் மரத்துப்போகும்.

    தலைவலி அதிகமாகும்

    தலைவலி அதிகமாகும்

    நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் ஜாதகத்தில் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் மற்றும் சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.

    போதை பழக்கம்

    போதை பழக்கம்

    புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்ல வழியிலும் செலுத்தும், தீய வழியிலும் கொண்டு செல்லும். மனிதனின் எல்லா வகை போதைப் பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம். ஒருவர் ஜாதகத்தில் புதனுடன் நீசக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலோ பார்த்தாலோ ஜாதகரின் புத்தி, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் செல்லும். தீவிரவாதியாகவும் வாய்ப்பு உண்டு.

    புதன் செவ்வாய் சேர்க்கை

    புதன் செவ்வாய் சேர்க்கை

    ஜாதகத்தில் புதன் செவ்வாய் 6,8,12ல் இணைந்திருந்தால் ஒய்வில்லாத பணி, யோசனையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும். லக்னாதிபதியும் சனியும் சேர்ந்து 6,8,12 களில் ஒன்றில் இருந்தால் தலையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.

    ஹயக்ரீவர் வழிபாடு

    ஹயக்ரீவர் வழிபாடு

    ஜாதகத்தில் புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவர் வழிபாடும், சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதும், சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை ஏற்படும். ஜன்ம நட்சத்திர தினத்தில் திருவெண்காடு சென்று புத பகவானை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் திருநள்ளாறு தரிசனமும் நன்மை ஏற்படும். புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும், திருப்பதி ஏழுமலையானையும் வழிபடலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+