சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 : ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்
சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விகாரி வருடம் தை 10ஆம் தேதி ஜனவரி மாதம் 24 ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்
சென்னை: சனி பகவான் நீதிமான். ஜீவன காரகன், ஆயுள் காரகன். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். மிக மெதுவாக நகர்ந்து செல்வார். 12 ராசிகளையும் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் ஆகும். எனவேதான் ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். இந்த 30 ஆண்டுகளில் ஏழரை ஆண்டுகள் ஏழரை சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அர்த்தாஷ்டம சனி, இரண்டரை ஆண்டுகள் கண்டச்சனியாகவும், இரண்டரை ஆண்டுகள் அஷ்டம சனியாகவும் இவர் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசிக்கு இதுநாள் வரை அஷ்டம சனியாக இருந்தவர் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
குரு பெயர்ச்சி முடிந்த நிலையில், அடுத்து சனி பெயர்ச்சி எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என ஜோதிடத்தில் இரு வகையான பஞ்சாங்கத்தை பின்பற்றுகின்றனர். நாம் திருக்கணிதப்படியே பலன்கள் சொல்லி வருகிறோம். அந்த வகையில் வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி திருக்கணிதப்படியும், 2020 டிசம்பர் 26ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.
கால புருஷ தத்துவப்படி சனிபகவான் தற்போது ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அங்கிருந்து பத்தாம் வீடான மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 2023ஆம் ஆண்டு வரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார் சனிபகவான். இந்த கால கட்டத்தில் குருபகவான் தனுசுவில் இருந்து மகரத்திற்கும், பின்னர் கும்ப ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே போல ராகு பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்கள் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே நாம் பலன்களை கணிக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கொடுக்கப் போகும் பலன்களை பார்க்கலாம்.

சனியால் சந்தோஷம்
ரிஷபம் ராசிக்கு சனி பகவன் யோகாதிபதி ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இனி ஏழரை ஆண்டுகளுக்கு பொற்காலம்தான். அதெப்படி ஏழரை ஆண்டுகள் என்று கேட்கிறீர்களா? இப்போது சனிப்பெயர்ச்சி ஒன்பதாம் வீட்டில் அமர்கிறார். சனி உங்க யோகாதிபதி. ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி அடுத்து கும்ப ராசிக்கு நகரும் போது பத்தாம் வீடு, மீனம் ராசிக்கு சனி நகரும் போது லாப ஸ்தானமான 11ஆம் வீடு இப்படி ஏழரை ஆண்டுகாலம் சனி உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார். உங்க கர்மவினைகளும், தசாபுத்திகளும் நல்லதாக இருக்க வேண்டும். அதே போல தசாபுத்திகளும் நன்மை செய்ய வேண்டும்.

தெய்வ கடாட்சம்
சனி எட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து விட்டார். அசிங்கம், அவமானங்கள் முடிவுக்கு வரப்போகிறது. ஒன்பதுக்கு உடைய சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவு அபரிமிதமாக இருக்கும். நேர்மையாக இருப்பீர்கள். ஆலய தரிசனம் அற்புதமான பலன்களை தரும். அஷ்ட சனியால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரும் சனிபகவானால் பாக்யங்கள் தேடி வரும், தெய்வ கடாட்சம் கிடைக்கும். குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சவுபாங்கியங்களும் கிடைக்கும்.

தன்னம்பிக்கை கூடும்
சனிபகவான் இப்போது மூன்றாம் வீட்டை பார்க்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும் வெற்றிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், மீடியா துறையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் குவியும்.

யோகம் தரும் சனிபகவான்
சுப விரைய செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்களை வாங்கலாம் சொந்த வீடு கட்டலாம். மாணவர்களுக்கு கல்வி நிலை அற்புதமாக இருக்கும். இதுநாள்வரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். பணவருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாடு பயணம் யோகத்தை தரப்போகிறது. ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகள் வழியாக சந்தோஷங்கள் அதிகரிக்கும். அவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.

கணவன் மனைவி ஒற்றுமை
சனிபகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பத்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். சனி பகவான் துலாம் ராசியில் உச்சமடைபவர் அந்த வீட்டை சனிபகவான் பார்க்கிறார். நோய்கள் தீரும், வெற்றிகள் தேடி வரும். எதிரிகளின் தொல்லை ஒழியும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். திருமணம் தடைபட்டிருந்தவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறும்.

சாதனை புரியும் காலம்
சனிபகவான் ரிஷபத்திற்கு அற்புதமான பலன்கள் தரப்போகிறார். அரசியலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பதவிகள் பட்டங்கள் தேடி வரும். அப்பாவின் உடல் நலத்தில் அற்புதங்கள் நடக்கும். வீடு வாசல் சேரும், சொத்து சுகங்கள் வந்து சேரும். தொடர் வெற்றிகள் தேடி வரும். சங்கடங்கள் விலகும் காலம் வந்து விட்டது. சாதனைகள் செய்யப்போகிறீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் கிடைக்கும். வருமானத்தினால் கடன்கள் அடைபடும். அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சியாக அமையப்போகிறது. இதுநாள்வரை தயங்கி தயங்கி ஒதுங்கி இருந்த நீங்கள் தைரியத்தோடு துணிந்து இறங்குங்கள். திருநாள்ளாறு சனிபகவானை போய் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications