புழல் சிறையில் சிக்கிய செந்தில் பாலாஜி.. மாட்டி விட்டதா ராகு திசை.. ஜாதக கட்டம் சொல்வதென்ன?
சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் சிறையில் இருக்கிறார். 5 மாதங்களுக்கு மேலாகியும் உடல் நிலையை காரணம் கூறியும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. கோச்சார ரீதியாக கிரகங்கள் சரியாக இருந்தாலும் தசாபுத்தி தனது வேலையை காட்டும் என்று கூறி வருகின்றனர் ஜோதிடர்கள். செந்தில் பாலாஜியின் ஜாதகப்படி அவருடைய தசாபுத்தி எப்படி இருக்கிறது. பலன் தருமா? பாதிப்பை ஏற்படுத்துமான என்று பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி: அக்டோபர் 21, 1975 ஆம் ஆண்டு மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் செந்தில் பாலாஜி. மேஷ ராசியில் சந்திரன் கேது, மீன ராசியில் குரு வக்ரம், மிதுன ராசியில் செவ்வாய், கடக ராசியில் சனி, சிம்ம ராசியில் சுக்கிரன், கன்னி ராசியில் புதன், துலாம் லக்னம் லக்னத்தில் ராகு, சூரியன். ஐப்பசி மாதம் பிறந்து சூரியன் நீச்சமடைந்து ராகு உடன் இணைந்திருந்தாலும் அரசியலில் அதிரடியாக களமிறங்கி பதவிகளை பெற்றவர் செந்தில் பாலாஜி.

பெயர் மாற்றம்: செந்தில் பாலாஜிக்கு பரிவர்த்தன யோகம் உள்ளது அது தவிர வீணை யோகம் உள்ளது. எந்த வேகத்தில் உச்சத்திற்கு போனாரோ அதே வேகத்தில் சரிவையும் சந்தித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. கரூர், தான்தோன்றி மலை பெருமாள் தான், செந்தில் பாலாஜியின் குலதெய்வம். அந்த கோவில் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கும் போய் வரும் செந்தில் பாலாஜி, ஒரு நாள், பெருமாள் கோவில் ஒன்றில் இருந்த ஜோதிடர்தான் செந்தில் குமாராக இருந்தவரை, செந்தில் பாலாஜி என, பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னாராம். ஜாதகம் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட செந்தில் குமார், உடனடியாக தன் பெயரை செந்தில் பாலாஜி என மாற்றியுள்ளார். ஜோதிடரின் வாக்கு பலித்து அரசியலில் வெற்றி பெற்றார்.
அரசியல் ஆர்வம்: கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 முடித்ததும், கரூர் அரசு கலை கல்லுாரியில், பி.காம் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
1995 ஏப்ரல், 16ம் தேதி, பாதியிலேயே விட்டு விட்டார். பின்னர் அரசியலில் கவனத்தை திருப்பினார். 20 வயதில் திமுகவில் சேர்ந்து, அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அதே வேகத்தில் கரூர் ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைத்தது. ஒன்றிய கவுன்சிலரானார்.
அதிமுகவில் ஐக்கியம்: அப்போதே அதிமுகவினருடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தை வளர்த்தவர் சசிகலா உறவினர்களின் உதவியோடு கடந்த, 2000 மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்த குறைந்த நாட்களிலேயே, மாவட்ட மாணவர் அணி இணை செயலர் பொறுப்பை பெற்றார். சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் சம்பந்தியான, திருச்சியை சேர்ந்த கலியபெருமாளின் நட்பு வளையத்துக்குள் நுழைந்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.
அபார வளர்ச்சி: 2004ல், கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலர் பதவியை பெற்றவர், அடுத்ததாக அதே, கலியபெருமாள் மூலம் 2006 சட்டசபை தேர்தலில், கரூரில் போட்டியிட சீட் பெற்று வெற்றியும் பெற்றார். கடந்த 2006ஆம் ஆண்டு 31வது வயதில் முதல் முறையாக எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார் செந்தில் பாலாஜி. திமுக ஆட்சி என்பதால் ஆளுங்கட்சிக்கு எதிராக அதிரடி வேலைகளை செய்தார்.
செய்தி பிரியர்: காவிரியில் மணல் அள்ளிய, ஜேசிபி, இயந்திரம் முன் படுத்து போராட்டம் நடத்தியது அதை அனைத்து ஊடகங்களிலும் வரச்செய்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை கவர்ந்தார். செந்தில் பாலாஜி தான் செய்யும் காரியங்களை எப்படியாவது செய்தியாக வரவழைத்து விடுவார். தினசரியும் ஊடகங்களில் இவரைப்பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.
அமைச்சர் பதவி: இதுதான் அவரது ப்ளஸ் ஆக மாறியது. கடந்த 2007 மார்ச், 11ல், கரூர் மாவட்ட ஜெ., பேரவை செயலரானார். அடுத்த சில நாட்களிலேயே கட்சியின் மாவட்ட செயலாளரானார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. முதல் முறையாக அமைச்சாரானார். ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவை கவர்ந்தது.
அடடே விளக்கம்: மினி பஸ்சில் இரட்டை இலையை வரைந்து அதற்கு விளக்கம் கொடுத்தது பரவலாக பேசப்பட்டது. வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு உணவு தர பயன்படுவது - வாழை இலை; உணவில் வாசம் ஏற்படுத்துவது - கருவேப்பிலை...உணவாகவே பயன்படுவது - கீரை; ...சாப்பிட்ட பிறகு போடுவது - வெற்றிலை...வீட்டு வாசலை அலங்கரிப்பது மாவிலை... நோய் போக்கும் மருந்தாக பயன்படுவது - துளசி இலை... இப்படிப்பட்ட இலைகளின் தொகுப்புதான், இரட்டை இலை'என்று சொன்ன விளக்கத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது. அதற்கு ஜெயலலிதாவிடம் பாராட்டும் பெற்றார் செந்தில் பாலாஜி
அஷ்டமத்து சனி: கடந்த 2015ஆம் ஆண்டு அவருக்கு அஷ்டமத்து சனி நடந்தது. அப்போது ஆரம்பித்ததுதான் அவரது வீழ்ச்சி. விரைவிலேயே தனக்கு ஏற்றம் வரும். அதற்கான ஜாதக கட்டங்களை கொண்டது தான், என் ஜாதகம்' என, நெருக்கமானவர்களிடம் கூறினார் செந்தில் பாலாஜி. கடந்த 2015ஆம் ஆண்டு அஷ்டமத்து சனி நடந்த போது ஊழல் புகாரில் சிக்கி அமைச்சர் பதவியை பறி கொடுத்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் அதிமுகவில் செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 2016ஆம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும் அமைச்சராக முடியவில்லை.
சுத்தலில் விட்ட கிரகங்கள்: டிடிவி தினகரனுடன் இணைந்து தனது எம்எல்ஏ பதவியை பறிகொடுத்தார். 2018ஆம் ஆண்டு டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் திமுகவில் இணைந்தார். கட்சிப்பதவி கரூர் மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். திமுக ஆட்சியில் ஸ்டாலின் அமைச்சரவையில் பவர்புல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாதகப்படி அவருக்கு ஜென்ம குரு ஜென்ம ராகு கோச்சாரத்தில் நடைபெறுகிறது. லாப ஸ்தானத்தில் சனிபகவான் பயணம் செய்கிறார்.
ராகு திசை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை ஆரம்பித்த பிறகுதான் அமைச்சர் பதவி வந்தது. ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். ஆரம்பம் எல்லாம் அமர்களம்தான் என்றாலும் கடைசியில் பாம்பு தனது புத்தியை காட்டி விட்டது என்று சொல்கிறார்கள் ஜோதிடர்கள். ராகு உச்சத்திற்கும் கொண்டு போகும் சில சமயங்களில் காலை வாரியும் விடும். ராகு திசை ராகு புத்தி, அடுத்து குரு புத்தி என முடிந்து தற்போது ராகு திசையில் சனி புத்தி தொடங்கியுள்ளது.
ராஜ யோக ஜாதகம்: செந்தில் பாலாஜி பிறந்தது மேஷ ராசி பரணி நட்சத்திரம் அதிகாரம், பதவி, செல்வாக்கு, சொல்வாக்கை கொடுத்தது. ஜாதகத்தில் உள்ள சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளனர். பலம் பெற்ற ராஜ யோகம் இவருக்கு இருக்கிறது. வீணை யோகம் அவரது ஜாதகத்தில் வேலை செய்கிறது என்கிறார் ஸ்ரீரங்கம் ஜோதிடர் கார்த்திக்கேயன். இந்த யோகம் பல துறைகளில் திறமைகளை கொடுக்கும்.
உடல் நல பாதிப்பு: அதிகாரத்தை கொடுத்த சூரியன், பண பரிவர்த்தனையை கொடுத்த சுக்கிரன் இவருக்கு சரியாக வேலை செய்தது. பணம்தான் அவருக்கு பிரச்சினை கொடுத்துள்ளது. ராகு திசையின் போதுதான் கட்சி மாறினார் அவருக்கு மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெற்று அமைச்சர் பதவியை பெற்றார். பிறந்த ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் கேது சந்திரன் சேர்க்கை அவருக்கு உடல் நல பாதிப்பை கொடுத்து வருகிறது. இதய ஆபரேசன் வரை சென்று மீண்டிருக்கிறார்.
சிறை சென்ற செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜியின் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்ற குரு விபரீத ராஜயோகத்தை தந்திருக்கிறார். குரு ராஜ யோகத்தை கொடுத்தாலும் அவசரப்பட்டு முடிவெடுத்து மாட்டிக்கொண்டார். பரிவர்த்தனை யோகம்தான் இவரை பல வழிகளில் காப்பாற்றியுள்ளது.
ஆறாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பது ராஜ யோகம். அதே நேரத்தில் குரு தனித்து ஆட்சி பெற்று இருந்தாலும் வக்ர நிலையில் பலமிழந்து இருக்கிறார்.
இதுதான் இவர் சிறை செல்ல காரணமாக இருக்கிறது.
பரிகாரம் என்ன: என்னதான் யோகமான ஜாதகமாக இருந்தாலும் ராகு திசையில் சனி புத்தி நடைபெறுகிறது. சாபமும் பாவமும் கலந்த ஜாதகம் என்பதால்தான் அமைச்சர் பதவியில் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் சிறையில் சிக்கி படாத பாடு படுகிறார் செந்தில் பாலாஜி என்கின்றனர் ஜோதிடர்கள். என்ன பரிகாரம் செய்தால் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று அவரது ஆஸ்தான ஜோதிடர்தான் கூற வேண்டும்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications