சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் தாலி கயிறு வைத்து பூஜை
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே இருந்த மகாலட்சுமி சிலை அகற்றப்பட்டு மஞ்சள் சரடுடன் கட்டப்பட்ட தாலி வைத்து பூஜை செய்யப்படுகிறது
திருப்பூர்: காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் கட்டப்பட்ட தாலி சரடு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்ததை அடுத்து ஏற்கனவே பெட்டியில் இருந்த மகாலட்சுமி சிலை அகற்றப்பட்டு தாலி வைத்து வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு மஞ்சள் விலை உயரும், திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி என்பது இக்கோவிலின் இறைவனான முருகப்பெருமானின் பக்தர்கள் கனவில் முருகப்பெருமான் சில பொருட்களை உணர்த்துவார்.
அந்த கனவை கண்ட பக்தர்கள் இக்கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் அக்கனவில் வந்த பொருள் பற்றி கூறும் போது, கோவிலில் பிரசன்னம் பார்க்கப்பட்டு, இறைவனின் ஆசி கிடைத்த உடன் பக்தரின் கனவில் வந்த பொருள் இந்த ஆண்டவன் பெட்டியில் வைத்து வழிபாடு செய்யப்படும். சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள். மற்றொரு பக்தரின் கனவில் வேறொரு பொருளை முருகன் உணர்த்தும் வரை ஆண்டவன் பெட்டியில் இருக்கும் பொருள் பூஜிக்கப்படும்.

தங்கம் முதல் மகாலட்சுமி வரை
இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஐம்பொன் வேலை
அருகம்புல், மிளகு, கீழாநெல்லிவேர் நோட்டு வைத்து பூஜை செய்யப்பட்போது மழை அதிகம் பெய்தது. அம்பு வைத்து பூஜை செய்தபோது சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இவ்வாறு வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல், நாணய குவியலுடன் ஐம்பொன்னில் செய்யப்பட்ட வேல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது.

ஐம்பொன் வேலை
அருகம்புல், மிளகு, கீழாநெல்லிவேர் நோட்டு வைத்து பூஜை செய்யப்பட்போது மழை அதிகம் பெய்தது. அம்பு வைத்து பூஜை செய்தபோது சாமி சிலைகள் மீட்கப்பட்டது. இவ்வாறு வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல், நாணய குவியலுடன் ஐம்பொன்னில் செய்யப்பட்ட வேல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது.

ஐம்பொன் மகாலட்சுமி
கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்செந்தூர் கோவில் அடிவாரம் பால்பண்ணை வீதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரின் கனவில் ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைக்க உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் மகாலட்சுமி சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்றிரவு முதல் விரலி மஞ்சளும் தாலிகயிறும் வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்துள்ளது.

மஞ்சள் தாலி கயிறு பூஜை
காமராஜ் என்பவரின் கனவில் ஐந்து மஞ்சள் துண்டு கோர்த்த தாலி கயிறு வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்துள்ளது. இதனையடுத்து மகாலட்சுமி சிலை அகற்றப்பட்டு மஞ்சள் தாலி கயிறு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் மூலம் திருமண தடைகள் நீங்கி அதிக அளவு திருமணங்கள் நடைபெறும் எனவும், மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும் நல்ல விளைச்சல் ஏற்படும். நோய்கள் நீங்கும் என்றும் கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications