ஸ்ரீரங்கம் மாசி மகம் திருவிழா பிப்ரவரி 27ல் கொடியேற்றம் - மார்ச் 5ல் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற மாசி கருட சேவை மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச்5ஆம் தேதி தெப்பத்திருவிழா ந

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் 8ஆம் நாளன்று முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் மார்ச் 5ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. கொடியேற்றம் தொடங்கி பத்து நாட்களும் நம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ஆம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ஆம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7ஆம் நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.

ஸ்ரீ ரங்கத்தில் மாசி மாத கருட வாகனத்தில் உலா வரும் பெருமாளை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருட சேவை தெப்பத்திருவிழாவின் நான்காம் நாளன்று மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

வெள்ளி கருட சேவை தரிசனம்

வெள்ளி கருட சேவை தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயில் வாகனங்களுக்கு தனிமகத்துவம் உள்ளது. அந்த வகையில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வந்தபின், கருடனுக்கு கொழுக்கட்டை அமுது படைக்கப்படும். அப்போது மாசி கருடனை தரிசனம் செய்வதால் காசிக்கு சென்ற பலன் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தளவிற்கு பெருமை வாய்ந்த வெள்ளிகருட சேவை நான்காம் திருநாளன்று மார்ச் 1 ஆம் தேதி நிகழ்கிறது.

நம்பெருமாள் வீதி உலா

நம்பெருமாள் வீதி உலா

தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2ஆம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
6ஆம் நாளான்று யானை வாகனத்திலும் 7ஆம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

மாசி மகம் தெப்பத்திருவிழா

மாசி மகம் தெப்பத்திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.

தெப்பத்திருவிழா நிறைவு

தெப்பத்திருவிழா நிறைவு

9ஆம் நாளான 6ஆம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி, இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

மாசி கருடன் காசி சிறப்பு

மாசி கருடன் காசி சிறப்பு

ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+