வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ராங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு - உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிறவியே போதும் இனி ஒரு பிறவி வேண்டாம் இறைவனின் பாதங்களில் சரணடைந்து விடுவோம் என்ற எண்ணம்தான் பலருக்கும் வருகிறது. அவ்வாறு சொர்க்கத்திற்கு போக நினைப்பவர்கள் வைகுண்டத்திற்கு செல்வதா கைலாயத்திற்கு செல்வதா என்ற குழப்பத்திலும் இருப்பவர்கள். சைவர்கள் சிவன் வசிக்கும் கைலாயத்திற்கும் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள்.
விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை பெருமாள் ஆலயங்களில் நடைபெற உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7 தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 8ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்று முதல் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். தினசரியும் அரையர் சேவையும் நடைபெறுகிறது.

மோகினியாய் நம்பெருமாள்
பகல்பத்து உற்சவ 10வது நாளான இன்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.

பரமபதவாசல் திறப்பு
நாளைய தினம் டிசம்பர் 18ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் அதிகாலை 3.45மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார். தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலை அடைகிறார். பின்னர் சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார்.

இறைவன் இருப்பிடம்
நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்துள்ளதால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ராப்பத்து நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28ஆம்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

லட்டு தயாரிக்கும் பணி
திருப்பூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications