மதுரை..தஞ்சாவூர்..திருவிழாக்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகள்..உயிரிழப்புகள் - தெய்வ குற்றமா?
கடந்த இரு மாதங்களில் மட்டும் கோவில்களில் தேர் திருவிழாவின் போது பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
சென்னை: தஞ்சாவூர் அருகே அப்பர் சாமி கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இன்றைய தினம் வரை கோவில் திருவிழாக்களில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பல தேர்கள் சாய்ந்துள்ளன. சில ஊர்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது தெய்வ குற்றமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட போதே கோவில் கண்ணாடி உடைந்தது அபசகுனமாக பார்க்கப்பட்டது. தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இருந்து அழகர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டபோது திடீரென சாய்ந்தார்.
அழகர் ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பல விபத்துகள் நடந்துள்ளன.

தேர் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் அமைந்துள்ள அங்காள அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிற்கான திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா கடந்த மார்ச் 8ஆம் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக எலவனாசூர்கோட்டை கள்ளக்குறிச்சி சாலையில் நிலைதடுமாறி தேர் சாலையில் கவிழ்ந்தது. இதில் கோவில் பூசாரி ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பொள்ளாச்சியில் தேர் சாய்ந்தது
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோட்டூர் - பழனியூர் ரோட்டில், பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவிலில் குண்டம் பூ மிதித்தல் விழா மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் திருவிழா துவங்கிய போது, 20 அடி உயரம் உள்ள தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி அம்மன் திருவீதி உலா நடந்தது. கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் கோட்டூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து பழனியூருக்கு தேரோட்டம் துவங்கியது. கோட்டூர் சந்தைப்பேட்டை ரேஷன் கடை அருகே நேற்று மதியம் சென்றபோது, எதிர்பாராத விதமாக திடீரென தேரின் சக்கரம், சாக்கடை கால்வாயில் இறங்கி சாய்ந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

திருப்பரங்குன்றம் தேர் மின் கம்பத்தில் உரசி விபத்து
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த மார்ச் 22ஆம்தேதி அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருத்தேரில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் சுற்றி வந்தனர். இதில் பெரிய தேருக்கு முன்பாக விநாயகருடன் சட்டத் தேர் ஒன்று, பெண்களால் இழுக்கப்பட்டது. கிரிவலம் முடிந்து மீண்டும் இந்த சட்டத்தேரானது திருக்கோயிலுக்கு முன்பாக நிறுத்த முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார வயர் தேர் மீது பட்டதால் தேர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் உரசியதில் அந்த மின் கம்பம் திடிரென்று சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் பக்தர்கள் யாருக்கும், எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

சித்திரை திருவிழா விபத்து
கடந்த 16ஆம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்ற போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் ஆற்றில் இறங்கிய பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் சில மணிநேரம் ஓய்வெடுத்தார். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கூவாகம் தேர் விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவின் போது விபத்து நேரிட்டதில் பத்து பேர் காயமடைந்தனர். கடந்த புதன்கிழமையன்று அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கூவாகம் தேர்த்திருவிழாவின் போது தேரோட்டத்தை காண அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் ஏராளமான மக்கள் ஏறி இருந்தனர். தேர் வீட்டின் அருகே வந்தபோது திடீரென பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தீ பிடித்த நாமக்கல் தேர்
நாமக்கல் இ.பி. காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பரமத்தி சாலையில் தேர் சென்று கொண்டிருந்தபோது போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரில் உயர் மின்னழுத்த கம்பியில் தேர் மோதாமல் இருப்பதற்காக மின் வாரிய ஊழியர் குமரேசன் என்பவர் நீண்ட குச்சியால் மின் கம்பியை தூக்கிப் பிடித்தார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி தீ விபத்து ஏற்பட்டது. தீப்பொறி தேரின் மீது விழுந்ததில் தேரின் சில பகுதிகளில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் காயம் அடைந்த மின் ஊழியர் குமரேசன் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மகாமகம் விபத்து...தஞ்சாவூர் கோவில் தீ விபத்து
கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாட்டில் கும்பகோணம் மகாமகம் விழாவில் புனித நீராடிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பல்வேறு அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. கடந்த 1997 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நிகழ்ந்த தீ விபத்தில் 48 பேர் இறந்தனர் மற்றும் 86 பேர் காயமடைந்தனர். இந்நிகழ்வு குடமுழுக்கு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றது.
Recommended Video

பரிகாரம் என்ன?
திருவிழாக்களில் நிகழ்ந்த விபத்து என்பதால் ஏதேனும் தெய்வ குற்றமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. கோவில்களில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications