தை திருவிழா : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவத
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நண்பகல் 12 மணியளவில், வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணியளவில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளத்தில் அமைந்துள்ளது சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதி. தென் தமிழக பக்தர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான கோவிலாகும். இந்த தலைமைப் பதியில் வழிபாடு என்பது குருவின் வழிபாடு அதாவது அய்யா (குரு)+ வழி (வழிபாடு) என்று அழைக்கப்படுகிறது. குருவின் வழியாக இறைவனின் பாதத்தை அடையும் வழி என்பதே இதன் பொருளாகும்.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தை மாதம் நடைபெறும் திருவிழா ஜனவரி 17ஆம் தேதியான நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம் நடைபெறுவதை ஒட்டி, நேற்று அதிகாலை 4 மணியளவில், தலைமைப் பதியில் முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல் வைபவமும், 5 மணியளவில் அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டத்துடன் தலைமை பதியை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணியளவில், அய்யா வழி பக்தர்கள் 'அய்யா சிவசிவ அரகர அரகரா' என்ற பக்தி முழக்கத்துடன் கொடியேற்றும் வைபவமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்ற வைபவத்தை தொடர்ந்து, வாகன பவனியும், பக்தர்களுக்கு இனிமமும் வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணியளவில், வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணியளவில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரண்டாம் நாளான இன்று இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். நான்காம் நாளான வரும் திங்களன்னு பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாளன்று பச்சை சாத்தி அன்ன வாகனத்திலும், ஆறாம் நாளன்னு கற்பக வாகனத்திலும், ஏழாம் நாளன்று சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் பவனி வரும் வைபவமும் நடைபெறும்.
எட்டாம் நாள் திருவிழாவாக வரும் ஜனவரி 24ஆம் தேதியன்று, மாலை 4 மணியளவில் அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் பதிவலம் வந்து மாலை 6 மணியளவில், முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து, அய்யா வைகுண்டசாமி குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
9ஆம் நாளன்று அய்யா வைகுண்டசாமி அனுமன் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், 10ஆம் நாளன்று இந்திர வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ஆம் நாளான வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நண்பகல் 12 மணியளவில், தேரோட்டமும் நடைபெறும். நான்கு ரத வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து மாலை 5 மணியளவில் நிலையை அடையும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications