இன்று உலக அல்சைமர் நாள்: புதன் பலவீனமானால் என்ன நோய்கள் வரும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்தைக் காரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திநாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இறைவன் அருளை பெறவும் கிரக தோஷ தடைகள், பீடைகளில் இருந்து விடுபட விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள் எல்லாம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி, அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும்.

தோஷ நிவர்த்திக்கும், யோகம் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு அவசியமாகும். நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான சக்தியும், அமைப்புகளும் உள்ளன. சில கிரகங்களுக்கு முக்கியமான காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியானவர் புதபகவான்.

பொன்னும் புதனும்

பொன்னும் புதனும்

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள். ஜாதகத்தில் ‘பொன்னவன்' என்று அழைக்கப்படுபவர் குரு. அவரது பலத்துடன் புதன் பலமும் இருப்பது அவசியம். எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் சரியான வகையில் தக்கவைத்து அதை ஒன்றுக்கு பத்தாக பெருக்க புதனின் பலம் தேவை.

ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.

 புதனால் ஏற்படும் நோய்கள்

புதனால் ஏற்படும் நோய்கள்

ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும், நாம் எல்லோரும் நினைப்பதை போல் சாதாரணமானது இல்லை. தற்போது பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. ஆகவே இந்த அல்சைமர் நோய் உண்டாக்கும் அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்க உண்டான வழிமுறைகளை பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள்

அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள்

பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, குறித்த சந்திப்புக்களை மறப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, புதிதாக கற்பதில் பிரச்சனை ஏற்படுவது போன்றவைகள் ஒரு குணமாக மாறத் தொடங்கிவிடும். பல வகை டிமென்ஷியா (ஞாபக மறதி) உள்ளது. அதனால் நீண்ட கால மறதி அல்லது குறைந்த கால மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிலசமயங்களில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களையும் கூட மறந்து விடுவார்கள்.
யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். ஏன், தங்களின் சொந்த வரவு செலவு கணக்குளைப் பராமரிப்பதில் கூட தடுமாறுவார்கள்.

இந்த வியாதி உள்ளவர்கள் இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களை கூட துணையில்லாமல் புரிய முடியாது.

மோசமாக மதிப்பீடு செய்வது மற்றும் முடிவு எடுப்பது காரணங்களை எடுத்து கூற திணறல் உள்ள போது, மாற்று வழிகளை முடிவு செய்ய அவர்களால் முடிவதில்லை. உதாரணத்திற்கு, கோடைக்காலத்தில் மெல்லிய பருத்தி ஆடையை அணிவதற்கு பதிலாக குளிர் கால ஜாக்கட்டை அணிவார்கள்.

இந்த வியாதியினால் தற்போதைய நேரம், தேதி மற்றும் நாளை மறந்து விடுவார்கள். ஏன், ஆட்களையும் இடங்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போய் விடுவார்கள். தங்கள் வீட்டின் முகவரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்றவற்றை கூட மறந்து விடுவார்கள்.

தொடர்பாற்றலில் பிரச்சனை தாங்கள் பேசும் மொழியை பயன்படுத்துவதில் பிரச்சனை, வார்த்தைகளை வெளிப்படுத்துவதில் பிரச்சனை அல்லது வார்த்தைகளை எழுதுவதில் பிரச்சனை போன்றவற்றை இந்த நோய் உள்ளவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும். உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும்.

அல்சைமர் நோய்க்கான தடுப்பு வழிகள்

அல்சைமர் நோய்க்கான தடுப்பு வழிகள்

கல்வி, விடா முயற்சியுள்ள மனநல நடவடிக்கைகள், ஊக்குவிக்கும் மொழி என இவை அனைத்தும் அறிவுத்திறனை அதிகரிக்க உதவும் என்று சிகாகோ ரஷ் பல்கலைகழக மருத்துவ மையத்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் பென்னெட் கூறியுள்ளார். அதனால் கற்பதை நிறுத்தாதீர்கள். கற்பதை தொடருங்கள், நீண்ட நாட்கள் வாழ்ந்திடுங்கள், அல்சைமரை தடுத்திடுங்கள்.

இணையதளத்தில் தினமும் ஒரு மணி நேரம் தேடுதலில் ஈடுபடுவது, புத்தகம் படிப்பதை விட, வயதாகும் மூளையை புதுப்பிக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஆர்வமுள்ள படிப்பவர்களால் இதனை நம்ப முடியாது தான். ஆனால் இது தான் உண்மை. கூகுள், பிங் அல்லது இதர தேடல் பொறியை பயன்படுத்துகிறீர்களா? தொடர்ந்து பயன்படுத்துங்கள். இது மூளையை சுறுசுறுப்பாக வைத்து அல்சைமரை தடுக்கும்.

அல்சைமர் நோய் தாக்கப்படும் நான்கில் ஒருவர் இளமை பருவத்தில் தலையில் காயம் ஏற்பட்டவராக இருப்பர். அதிலும் நடுத்தர வயதினர், தலையில் காயத்தை ஏற்படுத்தி கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோயால் தாக்கப்படலாம். திகைக்க வைக்கிறது அல்லவா? குறிப்பாக மற்றவர்களை விட கால் பந்து விளையாடுபவர்களுக்கு தான் பல வகையான ஞாபக நோய்கள் தாக்க 19 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தலையை காத்திடுங்கள்.

சளி, தொண்டை புண், அல்சர், நுரையீரல் அழற்சி மற்றும் ப்ளூ போன்ற தொற்றுக்கள் அல்சைமரை ஏற்படுத்தும். ஈறுகளில் ஏற்படும் தொற்றுகள் மூளைக்கு பாக்டீரியாவை அனுப்பும். அதனால் பற்களை நன்றாக துலக்கி, அவ்வகை தொற்றுக்களில் இருந்து விடுபடுங்கள்.

வைட்டமின் டி சத்தின் குறைபாடு அதீத அளவில் இருக்கும் போது, அறிவுத்திறன் பாதிப்படைய 394 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
கானாங்கெளுத்தி, சால்மன், சாலை மீன் போன்ற சில வகையான மீன்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ளது. மேலும் சில பானங்கள், காலை உணவுகள் மற்றும் இதர உணவு வகைகளிலும் வைட்டமின் டி அடங்கியுள்ளது

வழிபாடு, பரிகாரம்

வழிபாடு, பரிகாரம்

புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். ‘ஓம் மம் ஹ்ரீ ஹும் சிவ புத தேவாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். புதன்கிழமை தோறும் பச்சைப்பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம். புத ஜெயந்தி நாளில் புத பகவானை வழிபட்டு அவர் அருள் பெறுவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+