சிம்ம ராசிக்காரர் உத்தவ் தாக்கரே முதல்வர் கனவு தகர்ந்தது எப்படி - 'கை' கொடுக்காத கிரகங்கள்
முதல்வர் என்று அறிவிக்கப்பட்டு பத்து மணி நேரம் கூட முடிவடையாத நிலையில் கனவு கலைந்து போனது கடைசியில் வெறும் எதிர்கட்சி தலைவராகவே நீடிக்கப் போகிறார். எப்படி நடந்தது என்று கேட்டால் எல்லாம் நேரம்தான். உத்
மும்பை : அரசியலில் சத்ரியனாக இருப்பதை சாணக்கியனாக இருப்பதே மேல் என்பார்கள். இன்றைய சூழ்நிலையில் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையே பாஜகவிற்கு பொருந்தும். கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காலை வாரி விட்டாலும் தேர்தல் களத்தில் எதிரியாக களமிறங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு இணைந்து ஆட்சியை அமைத்துள்ளது பாஜக. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் முதல்வர் ஆசையை நிராசையாக்கி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ். உத்தவ் தாக்கரேவின் முதல்வர் கனவு தகர்ந்து போக காரணம் அவரது நேரம்தான், எதிரியாக இருந்த காங்கிரஸ் 'கை' கொடுக்க நினைத்தாலும் முக்கிய கிரகங்கள் 'கை' கொடுக்காமல் போனதே முதல்வராக பதவியேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மகாராஷ்ரா அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனாவின் தயவை நாடியது பாஜக. ஆனால் தனது மகன் ஆதித்யாவை முதல்வராக்க வேண்டும் என்று கூறினார் உத்தவ் தாக்கரே இதனை ஏற்க பாஜக மறுத்து விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இடையில் பிரச்சனை வந்ததற்கு காரணமே ஆதித்யா தாக்கரேதான் என்று கூட கூறலாம். அவர்தான் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறையாக தேர்தலில் நின்றார். எளிதாக வெற்றியும் பெற்றார். இவரின் ஆசைதான் பாஜக - சிவசேனா கூட்டணியை உடைத்தது.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் முதல்வராகி விட முடியாது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சித்தலைவர்
உத்தவ் தாக்கரே விசயத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
சிவசேனா பாஜக கூட்டணி முறிந்து போனது என்றாலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் ஆதித்யாவை முதல்வராக ஏற்க மறுத்த சரத்பவார், உத்தவ் தாக்கரே தலைமையை ஏற்க சம்மதித்தார். கடைசியில் எம்எல்ஏவாக கூட இல்லாத உத்தவ் தாக்கரே முதல்வராவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆதித்யா தரப்பில் ஏமாற்றம் ஏற்பட்டது.

அரசியல் சதுரங்கம்
முதல்வர் கனவோடு நேற்றிரவு தூங்கப்போனார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிரா அரசியல் களம் படுபரபரப்பாக இருந்தது. ஆனால் பாஜக தரப்பில் அமைதி நிலவியது. புயலுக்கு பின் அமைதி என்பதை விட புயல் வருவதற்கு முன்பாகவும் ஒருவித அமைதி நிலவும் அது போலத்தான் அரசியல் சதுரங்கத்தில் காய்கள் சாமர்த்தியமாக நகர்த்தப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சனிக்கிழமை விடிந்த உடன் காட்சிகள் மாறின. பாஜக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர்.

ஜாதகம் சொல்வதென்ன
உத்தவ் தாக்கரேவின் ஜாதகத்தில் சிம்ம ராசி சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் அமந்துள்ளார் கூடவே ராகுவின் சஞ்சாரம் உள்ளது. கன்னி லக்னம் மிதுனம் ராசியில் புதன் ஆட்சி பெற்றுள்ளார், ரிஷபத்தில் செவ்வாய் கும்பம் ராசியில் கேது தனுசு ராசியில் சனி வக்ரம், ஆட்சி பெற்ற குரு வக்ரம் கடகம் ராசியில் சூரியன் சுக்கிரன் கூட்டணி அமைந்துள்ளது.

உத்தவ் தாக்கரே கூட்டணி
1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த உத்தவ் தாக்கரே பிறக்கும் போது சுக்கிரதிசை நடந்துள்ளது. ராகு ததிசை புதன் புத்தி நடந்த காலமான 2003 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் தலைவராக பதவியேற்றார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் நேரத்திலும் அவரது வளர்ச்சி அதிகமானது. காரணம் குரு தசை குரு புத்தி காலத்தில் வளர்ச்சி அதிகம் குரு தசை புதன் புத்தி ஆகஸ்ட் 15, 2017 ஆம் தேதி தொடங்கியது நடப்பு லோக்சபா தேர்தலில் சிவசேனா பாஜக உடன் கூட்டணி அமைத்து பல இடங்களை கைப்பற்றியது.

கை கொடுக்காத கிரகங்கள்
நவம்பர் 22, 2019 வரை குரு திசை புதன் புத்தி செயல்பட்டது. சட்டசபை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் கூட்டணி முறிந்து போனது. காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கை கொடுக்க முன் வந்தனர். சரத்பவாரால் உத்தவ் தாக்கரே முதல்வராக அறிவிக்கப்பட்டும் அவரால் பதவியேற்க முடியாமல் போனதற்கு காரணம் கிரகங்களும், தசாபுத்தியும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஜாதகத்தில் கிரக நிலை
உத்தவ் தாக்கரேவிற்கு இப்போது குரு திசை கேது புத்தி தொடங்கியுள்ளது. 2020 அக்டோபர் வரை இந்த தசாபுத்தி நடக்கும். அக்டோபர் 2020 முதல் ஜூன் 2023 வரை குரு திசை சுக்கிர புத்தி நடைபெறும் காலம் உத்தவ் தாக்கரேவிற்கு அப்படி ஒன்றும் விசேசமில்லை காரணம் இரண்டுமே ஆறு எட்டு நிலையில் இருக்கின்றன. அவரது உடல் நலத்தில் கூட பாதிப்பு வரலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சிம்ம ராசிக்காரர் உத்தவ் தாக்கரேவிற்கு முதல்வராகும் யோகம் கை கூடி வரவில்லை. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் முதல்வராகி விட முடியாது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே விசயத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications