விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20 : துலாம் ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

விகாரி தமிழ் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு விஸ்வரூப வெற்றியை அளிக்கப்போவதாக கிரகங்களின் சஞ்சாரம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றி தரும் ஆண்டாக அமைகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் தரும் ஆண்டாக அமைகிறது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

வெளிநாட்டு வேலை

வெளிநாட்டு வேலை

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... சந்திரன் உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. பணவரவு தாராளமாகவே இருக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும்.

வெற்றி மீது வெற்றி வரும்

வெற்றி மீது வெற்றி வரும்

குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அதிசாரமாக நிற்பதால் பயணங்களால் சுப செலவுகள் ஏற்படும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு 11ஆம் வீடு, 9ஆம் வீடு 7ஆம் வீட்டை பார்வையிடுவதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கோ, மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் அமையும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். வைகாசி முதல் ஐப்பசி மாதம் வரை குருவின் சஞ்சாரம் மீண்டும் இரண்டாம் வீட்டில் தொடர்வதால் செல்வாக்கு அதிகரிக்கும்.

வீடு மனை வாங்கலாம்

வீடு மனை வாங்கலாம்

ராசிக்கு மூன்றாம் வீட்டில் ஆண்டு முழுவதும் சனி, கேது சஞ்சாரம் நீடிக்கிறது. தொட்டது துலங்கும் வெற்றிகள் தேடி வரும் பெயரும் புகழும் கிடைக்கும். வீடு மனை வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடியேறுவீர்கள். வெளிநாட்டு வியாபாரம் நன்மையடையும். லாபம் அதிகரிக்கும். ராகுவின் சஞ்சாரத்தினால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சொத்துக்களை வாங்கும் போது ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வாங்குங்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சி

பெண்களுக்கு மகிழ்ச்சி

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். புத பகவானின் சஞ்சாரத்தை அறிந்து முதலீடு செய்தால் ஆவணி, புரட்டாசி மாதங்களிலும் ஐப்பசி, மாசி, பங்குனியிலும் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு நன்மைகள் நிறைந்த புத்தாண்டாக அமைந்துள்ளது. வீட்டிலும் அலுவலகத்திலும் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+