தங்கமும், பணமும் வீட்டில் சேர இதை செய்யுங்க - 12 ராசிக்காரர்களும் தங்கம் வாங்க நல்ல நாட்கள்
அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
மதுரை: தங்கம் அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க அனைவரும் விரும்புகின்றனர். அதே போல தனத்திரயோதசி நாளிலும் தங்கம் வாங்குகின்றனர். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை.
நகைக்கடை விளம்பரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. நகை அடகு கடை விளம்பரங்களும், நகையை விற்பனை செய்ய எங்க கிட்ட வாங்க என்று அழைக்கும் விளம்பரம் அதிகரிப்பதை வைத்தே தங்கத்திற்கு உள்ள மதிப்பை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.

நகை வாங்கும் யோகம்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.

நகை வாங்க நல்ல நாட்கள்
மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.

நகை தங்க ராசியான நாள்
சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.

தங்கம் வாங்க யோகம்
ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று சுப வலிமை பெற ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் தன ஸ்தானம், வாக்கு குடும்ப ஸ்தானம். 11ஆம் வீடு லாப ஸ்தானம். இந்த இரண்டு வீட்டின் அதிபதிகளும் பரிவர்த்தனை பெறுவது யோகம்.

நகை அணியும் யோகம்
மூன்றாமிடம் கழுத்தை குறிக்கும். இங்கே சுப வலிமை பெற்ற குரு, சுக்கிரன் அமைய கழுத்தில் தங்க ஆபரணம் அணியும் யோகம் அமையும், சந்திரன் புதனும் சுபபலத்திலுடன் மூன்றில் அமைய தங்கம் அதிகம் சேரும் யோகம் உண்டு.

மனைவி மூலம் சொத்து
தன காரகன் குரு நட்பு, ஆட்சி , உச்சம் பெற்று கேந்திர கோண தன லாபமடைய தனயோகம் உண்டு. குரு கேது சுபத்துவம் பெற்று சுபதன்மையுடன் சேர்க்கை பெற கோடீஸ்வர யோகம் அமையும். எட்டாம் வீட்டில் அமரும் கிரகத்தின் மூலம் வெளிநாட்டு தனம், மனைவியின் மூலம் வரும் தனம், காப்பீடு தனம், மறைமுக தனம் அடைவதை காட்டும். இந்த லக்னத்தில் அமரும் கிரகம் நட்பு, ஆட்சி, உச்ச நிலையில் சுப பலமும் அடைந்து தசா புத்தி சாதகமாக இருந்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ராகு சுக்கிரன் சேர்க்கை
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம் பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச் சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும் ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள்.

நகையை மீட்க முடியும்
தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம் பெறலாம். அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.

தங்கத்தின் தோஷம் நீங்க பரிகாரம்
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல் கொடுப்பது கூடாது.
புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் இட்டு கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications