• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு புதன்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாள்

|

மதுரை: மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதனை ஆட்சிநாதனாகக் கொண்டவர்கள். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. நவக்கிரகங்களில் அறிவின் அதிபதியாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் திறமை கொண்டவராக இருப்பார். புதன் கிழமை எந்த ராசிக்காரர்களுக்கு லக்கியான நாள் என்று பார்க்கலாம்

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிக்கும். தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கும் புதனே காரணம். டஸ்ட் அலர்ஜி அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு நரம்பு பிரச்சினைகளக்கும் புதனே பொறுப்பு.

இதே போல பஞ்ச பட்சி சாஸ்திரத்திலும் புதன்கிழமை செய்யும் காரியம் யாருக்கு நன்மை செய்யும், வெற்றியைக் கொடுக்கும். யாருக்கு கெடுதல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் அனைத்தையும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியுள்ளனர்.

மயிலுக்கு புதன் படுபட்சி

மயிலுக்கு புதன் படுபட்சி

பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் படுபட்சி நாளை கவனித்து முக்கிய வேலைகளை செய்ய வேண்டும். படுபட்சி ஆகின்ற பட்சியானது அந்த நாள் முழுவதும் செயலிழந்து பலவீனமடையும். திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரங்களுக்கும் பட்சி மயில். மயிலுக்கு புதன்கிழமை படுபட்சி நாளாகும். இதே போல் தேய்பிறைக்கும் படுபட்சி நாளாக அமைகிறது. இதை சித்தர்கள் ஞானத்தினாலும் அறிவுரீதியாகவும் ஆய்வு செய்து அமைத்திருக்கிறார்கள்.

அதிர்ஷ்டமான நாள்

அதிர்ஷ்டமான நாள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய நாளாகும். எந்த ஒரு புதிய செயலையும் புதன்கிழமை செய்தால் அது உங்களை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்லும்.

புதன் பயணம்

புதன் பயணம்

கடக ராசிக்காரர்கள் புதன்கிழமை பயணங்கள் மற்றும் முதலீடுகளுக்கு உகந்தது. வேலை, தொழில் தொடர்பாக உங்கள் பயணத்தை புதன்கிழமைகளில் திட்டமிட்டால் அது வெற்றிகரமானதாக அமையும்.

புதனில் வெற்றி

புதனில் வெற்றி

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்கள். புதன்கிழமைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். புதன் உங்களின் ராசி அதிபதி என்பதால் நல்லதே செய்வார்.

புதன்கிழமை நல்லதில்லை

புதன்கிழமை நல்லதில்லை

விருச்சிகம், தனுசு மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு புதன்கிழமை நல்லதில்லை. இந்த நாட்களில் முக்கிய விசயங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த நாளில் பயணம் செய்தாலோ, முக்கியமான செயல்களை செய்தாலே அது வெற்றிகரமானதாக அமையாது.

புதன்கிழமை லக்கி நிறம்

புதன்கிழமை லக்கி நிறம்

புதன்கிழமைக்கு ஏற்ற நிறம் பச்சை. புதன் பகவானுக்கு ஏற்ற நிறம் பச்சை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிவது நன்மையை தரும் அதிர்ஷ்டத்தையும் தரும். அதிர்ஷ்ட தேதிகள்: 5, 14, 23. புதனால் பாதிக்கப்பட்டவர்கள் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி, பச்சை பயறு நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
As Wednesday shares Mercury's energy, it's a great time to socialize, travel or take a soak in a think tank. Wednesday zodiac signs are Gemini, Virgo. Gemini digs the mid-way mark of balance Wednesday represents.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more