மார்கழி பனியைப் போல பெண்கள் மென்மையானவர்கள் எப்படி தெரியுமா #மார்கழி
மார்கழி மாதத்தில் தொடங்கும் பனியானது பெண்களைப் போல வெளித்தோற்றத்திற்கு தங்களை கடுமையானவர்களாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் தொட்டவுடனே கரைந்து விடும் அளவுக்கு மென்மையானவர்கள். மார்கழி குளிரும் அப்படித
சென்னை: மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். மார்கழி மாதத்தில் தொடங்கும் பனியானது பெண்களைப் போல வெளித்தோற்றத்திற்கு தங்களை கடுமையானவர்களாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் தொட்டவுடனே கரைந்து விடும் அளவுக்கு மென்மையானவர்கள். மார்கழி குளிரும் அப்படித்தால் ஊசிபோல் உடம்பில் குத்தும் பனி உடம்பிற்கு பழகிவிட்டால் இதமாக தோன்றும்.
மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது, இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது.
நமது உள்நிலை திடமாக இருந்தால்தான் சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமன்பாட்டை கொண்டு வரவும் சாத்தியமாகும் காலமாகும். பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் திடமானவர்கள் என்பதை மார்கழி மாதம் உணர்த்துகிறது.

மார்கழியும் பெண்களும்
பெண்களை மார்கழி மாதத்தோடு ஒப்பிட்டு கவிஞர்களும், மாதங்களில் அவள் மார்கழி என்று உவமைப்படுத்தினார்கள். காரணம் மார்கழி மாதத்தில் தொடங்கும் பனியானது, வெளித்தோற்றத்திற்கு தங்களை கடுமையானவர்களாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் தொட்டவுடனே கரைந்து விடும் அளவுக்கு பெண்கள் மென்மையானவர்கள்.

மார்கழி பனி
கவிஞர் கண்ணதாசன் கூட ஒரு பாடலில் ‘மார்கழி மாதத்து பனியும் இந்த மங்கையை கண்டதும் பணியும்' என்று குறிப்பிட்டுள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும், மார்கழிப் பனியை குறிப்பிட்டு 'கொடிது கொடிது பனிக்காலம் கொடிது' என்று சிலேடையாக குறிப்பிட்டுள்ளார்.

கதகதப்பு தேவை
கவிச்சக்கரவர்த்தி கம்பர் மார்கழி மாதத்தில் ஒரு நாள் காலை வேளையில், ஆற்றங்கரையோரம் நடந்து செல்லும் போது, ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் குளிரை சமாளிக்க வேண்டி, அங்கிருந்த காய்ந்த மரப்பட்டைகளைக் கொண்டு தீ மூட்டி, அந்த தனலில் கைகளை வைத்து தன்னை கதகதப்பாக்கி கொண்டிருந்தான். அவ்வழியாக வந்த கம்பரும், அந்த சிறுவனுடன் சேர்ந்து கொண்டு, தன்னுடைய கைகளை வைத்து கதகதப்பாக்கி கொண்டே, ‘கொடிது கொடிது பனிக்காலம் கொடிது' என்றார்.

பனி கொடிது
பதிலுக்கு அந்த சிறுவனோ, ‘நன்று நன்று பனிக்காலம் நன்று' என்று சொன்னான். அதைக் கேட்ட கம்பரோ, தம்பி நான் என்னடான்னா பனிக்காலம் கொடிது'ன்னு சொன்னால் நீ என்னவோ பனிக்காலம் நன்று'ன்னு சொன்னால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார். அதைக்கேட்ட சிறுவனும், ஐயா நீங்கள் சொன்னதுக்கும், நான் சொன்னதுக்கும் ஒரே அர்த்தம் தான் என்றார்.

அறிவானவர்கள்
அதைக்கேட்ட கம்பரோ, தம்பி எனக்கு விளங்கலையே என்று குழம்பி நிற்க, சிறுவனோ, ஐயா, நீங்களோ பனிக்காலம் மிகவும் கொடியது என்று சொன்னீர்கள். நானோ, இந்த பனிக்காலத்தை சமாளிப்பதை விட அந்த ஆலகால விஷத்தை சாப்பிடலாம் என்பதைத் தான் ‘நன்று நன்று பனிக்காலம் நன்று' அப்படின்னு சொன்னேன். என்றான். அதைக் கேட்டதும் கம்பர் அந்த சிறுவனின் அறிவுத் திறனை வியந்து பாராட்டினார். பனிக்காலம் அந்த அளவுக்கு அனைவரையும் வாட்டி வதைக்கும்.

பெண்களும் மார்கழியும்
மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு ஸ்திரமான நிலையை மன அமைதியை தோற்றுவிக்கிறது. நமது உள்நிலை திடமாக இருந்தால்தான் சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமன்பாட்டை கொண்டு வரவும் சாத்தியமாகும் காலமாகும். பெண்கள் அடிப்படையில் மென்மையானவர்களாக இருந்தாலும் திடமானவர்கள் என்பதை மார்கழி மாதம் உணர்த்துகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications