உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் 2016: உங்க ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் எப்படி இருக்காங்க?

சர்க்கரை நோய்க்கு ஜோதிட ரீதியான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நோய்களுக்கும், ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமான இன்று சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஜோதிட ரீதியான காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் விவரித்துள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன்.

சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு என்றால் மிகையில்லை. நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது.

World Diabetes Day 2016:Diabetes link with Astrology

சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. உடம்பிலிருந்து வரும் சர்க்கரையின் (Glucose) அளவைக் கட்டுப்படுத்த இயற்கையாக கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கும். இந்தக் கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவில் உண்டாகும் குறைபாடே சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்ற குறைபாடுதான் பல நோய்கள் உடம்பில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை முதலில் அறிந்து கொள்வோம்.

ஜோதிட ரீதியான காரணங்கள்

•குரு மற்றும் சுக்கிரன் இருவருமே சர்க்கரை நோய்க்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். இவ்விருவரும் தாமாக தனிப்பட்ட எந்த வியாதியையும் உருவாக்குவதில்லை, குறைபாட்டினைத் (Deficiency) தோற்றுவித்து பலவிதமான நோய்கள் உண்டாவதற்குக் காரணமாகிறார்கள். ஆனால் நீரிழிவு வியாதியைத் தருவது குருவும், சுக்கிரனும்தான் என்று கூறப்படுகிறதே அது எப்படி என்ற கேள்வி எழலாம். குரு மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் வலுவிழக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகிறது.

•இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இந்தச் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது, அப்படியென்றால் இவர்கள் எல்லோரின் ஜாதகத்திலும் குருவும், சுக்கிரனும் வலுவிழந்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

•குருவும், சுக்கிரனும் சாதகமாக அமர்ந்திருந்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் 80 வயதிற்கு மேற்பட்டும் அன்றாடம் மருந்துகளை உட்கொண்டு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருப்பர். குரு - சுக்கிரனின் வலு குன்றியிருந்தால் 50 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோயின் தாக்கத்தால் பெருத்த பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள் என்பதே இதற்கான பதில்.

•குரு ஆட்சி உச்சம் பெற்றவர்களுக்கும் நீசமடைந்தவர்களுக்கும் வக்ரம் பெற்றவர்களுக்கும் சர்க்கரை நோய் வந்து விடுகிறது. குருஆட்சி உச்சம் பெற்றவர்கள் சர்க்கரை நோய் வந்தாலும் எதிர்ப்பு சக்தி பெற்று மருந்து மாத்திரைகளுடன் பிரச்சனையின்றி வாழ்ந்திடுவர். ஆனால் குரு நீசமும் வக்ரமுமடைந்தவர்களுக்களுக்கு மருந்துகளும் பலனின்றி அவதியுருவர்.

•கால புருஷனுக்கு ஆறாம் வீடு எனப்படும் கன்னி ராசியில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு தொடர்பு பெற்று அசுபத்தன்மை பெற்று நிற்பது. மற்றும் சுக்கிரன் நீசமடைவது. கன்னியில் நீசமடைந்த சுக்கிரன் செரிமான கோளாரை ஏற்படுத்தி நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடுகிறது.

•துலாம்,மீனம் மற்றம் தனுசு,ரிஷபம் லக்னமாகவோ ராசியாகவோ பெற்றவர்களுக்கு குருவும் சுக்கிரனும் சஷ்டாஸ்டகமாக நின்று சர்க்கரை நோய் ஏற்பட்டுவிடுகிறது.

•எந்த லக்னமானாலும் அதன் ஆறாம் வீட்டில் குருவும் சுக்ரனும் ஆறு/எட்டு/பன்னிரெண்டு அதிபதிகளாகி அசுபத்தன்மை பெற்று நிற்பது.

•கால புருஷனுக்கு பன்னிரெண்டாம் வீடாகிய மீனத்தில் குரு ஆட்சி பெறுவது அல்லது சுக்கிரன் உச்சமடைவது.

•ஜெனன ஜாதகத்கதிலோ அல்லது கோச்சாரத்திலோ கன்னி ராசியில் சனி நிற்பது இறுதிநிலை அல்லது தீவிரமான உச்ச நிலை சர்க்கரை நோயை தெரிவிக்கிறது. கன்னியில் வாயு கிரகமான சனி செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் என்சைம் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி தீவிர சர்க்கரை நோயை ஏற்படுத்திவிடுகிறது.

•குரு ராகு சாரம் பெற்று நிற்பது, ராகுவுடன் இனைந்து நிற்ப்பது சுக்கிரன் சனி சாரம் பெறுவது மற்றும் சுக்கிரன் சனியுடன் இனைந்து நிற்ப்பது குருவும் சுக்கிரனும் பாதகாதிபதி தொடர்பு பெறுவது அல்லது பாதகாதிகளாகவே நிற்பது பிறப்பிலிருந்தே சர்க்கரை நோய் ஏற்பட்டு விடுகிறது.

•சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை எந்த விதத்தில் ஏற்பட்டாலும் அதிக கார்போஹட்ரேட் உணவுகளினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

மேற்கத்திய ஜோதிட கிரக நிலைகள்:

•உப கிரகமான புளுட்டோ கன்னியில் நிற்பது மற்றும் அசுப தொடர்பு பெறுவது கனைய செயல்பாடுகளில் பிரச்சனையை ஏற்படுத்தி இன்சுலின் சுரப்பதில் குறைபாட்டினை தந்து தீவிர சர்க்கரை நோயை ஏற்படுத்திவிடுகிறது மேற்கத்திய ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை குளுக்கோஸ் ஏற்பு பரிசோதனை (Glucose Tolerance Test)மூலம் அறிய முடியும்.

•உப கிரகமான யுரேனஸ் கன்னியில் நிற்பது அல்லது அசுப தொடர்பு பெறுவது உணர்ச்சி வசப்படுவது, மன அழுத்தம், மன உளைச்சல், அடிக்கடி கோபப்படுவது போன்ற காரணங்களால் திடீரென சர்க்கரை நோயை ஏற்படுத்தி செரிமான கோளாருகள் மற்றும் கனைய பிரச்சனைகளை ஏற்படுத்தி சர்க்கரை நோய்க்கான தீவிர சிகிச்சை மேற்க்கொள்ளும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது. தவறும் பட்சத்தில் கனைய செயலிழப்பு மற்றும் உயிரிழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.

•வைட்டமின் B6 (காரக கிரகம் குரு) குறைபடுள்ளவர்களுக்கு அமினோ அமிலமான ட்ரிப்டோபான் (Tryptophan) ஸாந்துரனிக் (Xanthurenic acid) அமிலமாக மாற்றமடைந்து குறைந்த கால இடைவெளியில் கனையம் சிதிலமடைந்து ரத்தத்தில் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. அதனால் அதிகளவு குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து செல்லிலிருந்து அதிகளவு நீரினை வெளியேற்றுவதால் அடிக்கடி சிறுநீரு கழிப்பது நாவரட்சி போன்றவை ஏற்படுகிறது.

•மேலும் வைட்டமின் B6 என்பது பெண்கள் கருத்தரிக்க மிகவும் அவசியமானது. எனவே பெண்களுக்கான வைட்டமின் (Female vitamin) என செல்லமாக அழைக்கப்படுகிறது. புத்திர காரகனாகிய குரு இதற்க்கும் காரகமாவது எவ்வளவு பொருத்தமானதன்றோ!

•தாதுக்களில் முக்கியமானதான மாங்கனிஸ் (காரக கிரகம் குரு) மற்றும் க்ரோமியம் (காரக கிரகம் குரு) குறைபாடும் கனைய செயல்பாடு மற்றும் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

ஜோதிட பரிகாரங்கள்

•குரு பரிகாரஸ்தலங்களான திரு ஆலங்குடி,தென்குடி திட்டை, திருசெந்தூர் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்னையில் உள்ளவர்கள் திருவலிதாயம் அம்பத்தூர் பாடியில் உள்ள குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது வியாழக்கிழமை மகான்கள் தரிசனம் மற்றும் விரதமிருப்பது ஆகியவை சர்க்கரை நோய் வருவதை தடுக்கும். நோய் ஏற்பட்டவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனேயின்றி விரதமிருக்க கூடாது.

•சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும் சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோஷம் குறையும். விருத்தியடையும். பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நல்லது. அத்துடன் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

•அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. அங்கு சென்று தேவியருடன் அருள்பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும்.

•சென்னை மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற வெள்ளீஸ்வரர் ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை பிரார்த்தித்து வழிபட குடும்பத்தில் நலங்களும், வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும்.

•சர்க்கரை நோயினால் ஏற்படும் கண்கள் சம்பந்தமான கோளாறுகள், மற்றும் சர்க்கரை நோய் நிவர்த்தியாகும். பரிகார ஸ்தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தோஷங்களும் நீங்கும். சுபிட்சம் உண்டாகும்.

•ரத்தத்தை குறிக்கும் காரக கிரகமான செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலுக்கு செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும். இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சர்க்கரை அளவை குறைத்து நோய் பாதிப்பை குறைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+