Thulam Rasi Palan: அரங்கம் அதிரட்டுமே.. துலாம் ராசியினரை அடிச்சு தூக்கும் அதிர்ஷ்டம்
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்படும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திலும் முக்கியமான கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகின்றன. துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த 15 நாட்கள் அற்புதமாக இருக்கும். தடைகள் முழுமையாக விலகி அடுத்தடுத்து நற்பலன்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நிறைவேறும். உங்களின் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைக்கும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகள் குவியும். உத்யோகம், தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். கடன் சுமை குறையும்.
வாகன மாற்றம்
மனதில் இருந்த சிக்கல்கள் விலகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பங்களில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வண்டி, வாகனம் மாற்றங்கள் நிகழும். மனதிற்கு பிடித்தபடியான வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
முன்னேற்றம்
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசு வழியில் இழுபறியாக இருந்த காரியங்கள் நிவர்த்தியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சிலருக்கு சொந்த வீடு கனவு நனவாகும். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதைக் கூடும். பூர்விக சொத்து, நிலம் உள்ளிட்டவற்றில் இருந்த சட்ட சிக்கல்கள், வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயமடைவீர்கள்.
கவனம்
வார்த்தைகளில் கவனம் வேண்டும். கோபங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வாழ்க்கை துணையுடன் வீண் விவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தில் உங்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இதயம், கொழுப்பு பிரச்சனைகள் இருப்போர் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications