Puthandu Palan: மிதுன ராசிக்கு 100க்கு 95 மார்க்.. அதிர்ஷ்ட தேவதை கொட்டிக் கொடுக்கப் போகுது
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மிதுனம் புத்தாண்டு பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதும் குழப்பத்திலேயே இருந்து கொண்டிருந்திருப்பீர்கள். முன்னேற்றமே கேள்விக்குரியாக உள்ளது என்கிற நிலைமை 2026 மார்ச் மாதம் வரை இருக்கும். அதற்குப் பிறகு எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது. வாழ்க்கையில் பயமே இருக்காது. அசாத்தியமான தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
கழுத்துப் பிரச்சனை, நரம்புப் பிரச்சனை, சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனை, இதயப் பிரச்சனை இருந்திருக்கும். அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் வலி, வேதனைகள் நீங்கும். குழப்பங்கள் நீங்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்துக்கு குரு போவதால் நல்ல பணவரவு உண்டாகும். வீட்டில் திருமணம் நடைபெறும். வர வேண்டி பணங்கள் வசூலாகும்.
பதவிகள் வரும்
பெரிய உத்தியோகத்தில் செட்டிலாகும் வாய்ப்பு ஏற்படும். பதவிகள் தேடி வரும். பிசினஸ் பார்ட்னராகும் வாய்ப்பு ஏற்படும். உங்களுடைய இலக்குகள் அனைத்தும் நனவாகும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். கண் பிரச்சனை நீங்கும். மற்றவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று ஈஸியாக தெரிந்து கொண்டு உங்கள் வியூகங்களை வைக்கக்கூடிய அற்புமான காலகட்டமாக இருக்கும்.
கடன் நீங்கும்
நிறைய பேருக்கு கடனை அடைக்கும் யோகம் ஏற்படும். மனம் ரீதியாக, உளவியல் ரீதியாக இருக்கும் பாதிப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். வாடகை வாங்கக்கூடிய பாக்கியம் ஏற்படும் வீட்டை விஸ்தீரணம் செய்யும் யோகம் உண்டாகும். வீட்டுக்குள்ளேயே இன்டீரியர் டெக்கரேஷன் செய்யும் யோகம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும்.
திடீர் திருமணம்
அஷ்டமத்துக்கு குரு பார்வை இருக்கும்போது கெட்ட சம்பவங்களே நடக்காது. திடீர் திருமணம், எதிர்பார்க்காத குழந்தை பாக்கியம் ஏற்படும். முகம் தொடர்பான பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. உங்களைப் பொருத்தவரை இந்தப் புத்தாண்டு நிம்மதியைத் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் எதுவுமே சொந்தமாக செய்யாமல் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செய்வது வெற்றியைத் தரும்.
குடும்ப நபர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சந்தோஷம் 90 சவீதமும். பொருளாதார ஏற்றம் 95 சதவீதமும் நன்றாக இருக்கும். கற்பக விநாயகர் வழிபாடு உங்களுக்கு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications