ராகு கேது பெயர்ச்சி: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. வாழ்க்கையே மாறப் போகுது
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது கன்னி ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி கன்னி ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஆறாம் இடத்துக்கும், கேது பகவான் 12 ஆம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். ஜென்ம கேதுவால் நிறைய சிக்கல்கள் வந்திருக்கும். அந்த சிக்கல்கள், சங்கடங்கள் நீங்கி சாதனை படைக்கும் காலம். உத்யோகம், தொழிலில் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மாற்றம்
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள், எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். வீடு, தொழிலிலும் எதிர்பார்த்த மாற்றங்களால் ஏற்றம் உண்டு. நல்ல வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு பத்தாம் இடத்தில் இருந்து வேலையில் பிரச்னை கொடுத்தாலும், ராகு ஆறாம் இடத்தில் இருந்து அதை சரி செய்து விடுவார்.
வெற்றி
உயர் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உள்ளது. வருமானம் நிச்சயம் உயரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். முதலீட்டில் லாபம் நன்றாக இருக்கும். பழைய சொத்துகளை விற்பனை செய்து புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.
ஆரோக்கியம்
ஏற்கனவே வேலை, தொழிலில் இருப்போருக்கு கூடுதல் வேலை வாய்ப்பு, தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
முன்னேற்றம்
வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கான முன்னேற்ற நகர்வுகள் இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். குழந்தைகளின் கல்வி நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிம்மதி
இறங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதுக்கு நல்ல ஓய்வு, தூக்கம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வம்பு வழக்குகளில் சாதமான தீர்ப்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆச்சர்யபடுமளவுக்கு பல நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
லாபம்
குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். மருத்துவம், ஊடகம், விஞ்ஞானிகள் சார்ந்த துறைகளில் இருப்போருக்கு ஏற்றம் உண்டு. சமூகத்தில் மிக உயரிய விருதுகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்க்கை மொத்தமாக புரட்டிப் போடுமளவுக்கு பிரம்மாண்ட வெற்றிகள், லாபம், ஏற்றம் நிச்சயம் கிடைக்கும்.
பரிகாரம்
பங்குச்சந்தை, முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தஞ்சாவூர் ராஜகுரு வசிஷ்டேசர் கோயில், திருநாகேஸ்வரம் கோயில் சென்று வழிபடுவது நன்மை தரும்.












Click it and Unblock the Notifications