ராகு கேது பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு ஜாக்பாட்.. எல்லாமே பெஸ்ட்.. பணம் கொட்டப் போகுது
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது ரிஷபம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் 10 ஆம் இடத்துக்கும், கேது பகவான் 4 இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். இது உத்யோகத்தில் நல்ல மாற்றங்களை கொடுக்கும். தொழிலில் வெற்றியை தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கொடுக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும்.
ஜாக்பாட்
பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். மனதில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி பிறக்கும். ஏற்கனவே சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக தான் உள்ளது. ராகுவும் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். வீடு, நிலம், வண்டி, வாகனம் ஆகியவற்றில் நிலவி வந்த சட்ட சிக்கல்கள் விலகும்.
சொத்து
சுப காரியங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணத்துக்கு முயற்சி செய்வோருக்கு இந்த காலம் திருமணம் நடைபெறும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். உங்கள் வீடு, அலுவலகம் ஆகிய சொத்துகளில் நீண்ட காலமாக திட்டமிட்ட புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள்.
வருமானம்
வருமானம் பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர் வழி சொத்துகளில் இருந்த தடைகள் நீங்கி நல்லது நடக்கும். அரசு, அரசியல் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். பழைய இடத்தை விற்பனை செய்து புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில்
தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலாக இருந்தால் சிறப்பாக இருக்கும். உத்யோகம், கல்வி, தொழிலில் நிமித்தமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் காலமாக இது இருக்கும்.
கவனம்
புதிய சொத்துகளில் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் போதும் எச்சரிக்கை அவசியம். வீண் விரயம் ஏற்படும். ராகுவால் பேராசை இருந்தால் தொழிலில் சிக்கல்கள் உருவாகும். தொழிலில் கவனம் தேவை. உங்கள் தந்தை ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும்.
பரிகாரம்
உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டிய நிலை வரும். வண்டி, வாகனம் ஓட்டும்போது கவனம் வேண்டும். வார்த்தையில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களை நன்கு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வம் மற்றும் பெண் தெய்வ வழிபாடுகள் நன்மையை கொடுக்கும்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications