ராகு கேது பெயர்ச்சி: விருச்சிகம் ராசிக்கு எல்லாமே சூப்பர்.. ஆரோக்கியம் மட்டும் கவனம் பிகிலு

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது விருச்சிக ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ராகு - கேது என்பது சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

rahu-ketu-peyarchi-viruchigam-will-get-good-changes-in-life

தாக்கம்

மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு-கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனியின் வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

போர்

போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் நான்காம் இடத்துக்கும், கேது பகவான் 10 ஆம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம். இந்த காலத்தில் வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள சொத்துகளில் ஏதாவது வில்லங்கம் இருந்தால் அது விலகும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கல்வி

இதுநாள் வரை ராகு ஐந்தாம் இடத்தில் இருந்த காரணத்தால் வீண் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருக்கும். காரிய தடங்கல்கள், தோல்விகள் என் மனம் துவண்டிருப்பீர்கள். நண்பர்களுடன் பிரிவு, குடும்பத்தில் பிளவு என்று ஏராளமான பிரச்னைகள் வந்திருக்கும். தற்போது அந்தப் பிரச்னை எல்லாம் சரியாகிவிடும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள்.

தொழில்

மாணவர்களின் கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். ராகு தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். தொழிலில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி நல்ல பலன்கள் கிடைக்க தொடங்கும்.

முன்னேற்றம்

மன உளைச்சல்களில் இருந்து விடுதலையாகி, நிம்மதி பெறும் அற்புதமான காலமாக இது இருக்கும். வருமானம், பண வரவு திருப்தியாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்வதற்கான முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள இது சிறந்த காலம். வாடகை மூலம் வருவாய் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிலில் இருப்போருக்கு ஏற்றம் உண்டு.

உயர்வு

கடன் சுமைகள் குறையும். வம்பு, சட்டம், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அற்புதமான மாற்றங்களால் லாபம் நன்றாக இருக்கும். முதலீடு பல மடங்கு உயரும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு பதவி, அந்தஸ்து உயரும். பழைய சொத்துகளை விற்று கடன் அடைப்பீர்கள்.

பரிகாரம்

ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். வண்டி, வாகனம் ஓட்டும் போது அதிக கவனம் வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் அகல கால் வைக்க வேண்டாம். மனதில் அவ்வபோது குழப்பம் ஏற்படும். சனிக்கிழமை நாளில் கால பைரவர் கோயில் அல்லது ஆறு, குளம் ஆகியவற்றுடன் உள்ள கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+