ராகு கேது பெயர்ச்சி: விருச்சிகம் ராசிக்கு காசு மேல காசு வந்து கொட்டும்.. நிதானம் முக்கியம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்னவிதமான யோக பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
திருக்கணிதத்தின்படி ராகு கேது பெயர்ச்சியானது மே 18 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளனர். பொதுவாக மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். ராகு, கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசி அல்லது விருச்சிக லக்னத்தில் பிறக்கக்கூடிய நபர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி காலம் சோதனை காலம் என்று சொல்லலம். குரு அஷ்டமத்தில் அமர்ந்திருக்கிறார். சனி பகவான் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
தொழில்
நான்காம் இடத்தில் ராகு அமர்ந்து குரு பார்வையில் இருப்பதால் உற்பத்தித் துறை, டெக்னாலாஜி டிரான்ஸ்பர் துறை, பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு, டிரான்ஸ்போர்ட் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு, அனைத்துவிதமான உற்பத்தித் துறை, வேறு மொழி கற்றுக் கொடுக்கக்கூடிய நபர்கள், இன்ஸ்டிட்யூட்ஸ் நடத்தும் நபர்கள், ஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நபர்களுக்கு அமோகமான காலமாக இருக்கும்.
ஆரோக்கியம்
வங்கித் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் ஆவதற்கான யோகம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் ராகு அமர்ந்து குரு பார்வை இருப்பதால் சொந்த ஊருக்கு இடமாற்றம் கிடைத்து மேனேஜ்மென்ட் லெவலில் அமரும் வாய்ப்பு உண்டாகும். மார்பகம், நெஞ்சு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொழுப்பு, அடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.
பிள்ளைகள்
2026 மே வரை அமோகமான காலகட்டமாக இருக்கும். அதற்கு மேல் 6 மாதத்துக்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் ராகு அமரும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக அளவிலான கவனம் செலுத்தும் பிராப்தம் உண்டாகும். பிள்ளைகளை கண்டிப்பாக வளர்த்துவது நல்லது.
சூழ்ச்சியில் கவனம்
வெளிநாடு சென்று படிப்பவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். கேது உட்காரும் இடம் பத்தாம் இடம் என்பதால் தொழில் வேண்டாம் என்று கூறி வெளியில் செல்லும் வாய்ப்பு உண்டாகும். துறையை மாற்றுவது போன்ற சூழ்நிலை வரும். சூழ்ச்சியால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ரசாயனம், சித்தா, டெஸ்டிங் அனலிசிஸ், பேக் எண்டில் வேலை செய்பவர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும்.
நிதானம் நல்லது
பொறுமையாக, நிதானமாக செயல்படுவது நல்லது. மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். குருவின் அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அருமையான குழந்தை பாக்கியம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மதிப்பெண்
சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமர்ந்திருக்கும் கேது நிறைய தொல்லைகளை கொடுப்பார். அதிலிருந்த விடுபடுவதற்கு ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருக்கு வடமாலை சாற்றுவது அற்புதமான பலன்களைத் தரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications