ராகு கேது பெயர்ச்சி: துலாம் ராசிக்கு ராஜ யோகம்.. அதிசயங்களால் மாற போகும் வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

Rahu ketu peyarchi Thulam Astrology

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.

2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம்: பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து.. குரு பார்வையும் இருப்பதால் ராஜ யோகம் ஏற்படுகிறது. எதிலும் ராஜா போல பிரம்மாண்ட வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். காதல் உறவு திருமணமாக மாறும்.

கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் சிறப்பான அதிர்ஷ்டம் கொட்டும். நீங்கள் கடினம் என்று நினைக்க கூடிய முயற்சிகளில் கூட எதிர்பாராத வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு.

உத்யோகம் மற்றும் தொழிலில் ஜேக்பாட் யோகம் உண்டு. குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் குரு அமர்வதால் எல்லாவற்றிலும் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணத்தால் மாற்றம் ஏற்படும்.

கடன் பிரச்னைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சியால் அதிகளவு பயன்பெற போவது துலாம் ராசியினர் தான். உங்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது. யாராலும் உங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது. உங்கள் வாழ்வில் அதிசயங்கள் நடைபெற போகும் காலமாக இது இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: உடலில் சுண்ணாம்பு சத்து குறைய வாய்ப்புள்ளது. கால் முட்டி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேற்று மொழி நண்பர்களிடம் அகவனமாக இருக்க வேண்டும். இதில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்: கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள குகே சுப்ரமணியா முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+