தங்கம் விலை ஏறுமா, இறங்குமா?.. உலகில் கடலால் வரப்போகும் பாதிப்பு – ராகு கேது பெயர்ச்சி பொது பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி நிகழ்ந்துவிட்டது. இதேபோல ராகு கேது பெயர்ச்சியும் உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய பொது பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். கிரெடிட் கார்டுகளின் கடன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கனிம வளம்
சனி வீட்டில் உள்ள ராகு பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களை எல்லாம் கண்டறிந்து கொடுக்கும். பெட்ரோலியம் உள்ளிட்ட விலை உயர்ந்த பல்வேறு கனிமங்கள் இந்தியாவில் கண்டறியப்படும். சுரங்கங்கள் கண்டறியப்படுவதால் பல ஊர்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள். அதற்கு அவர்களுக்கு பல மடங்கு நஷ்ட ஈடும் வழங்கி மக்களின் வசதி, வாய்ப்பும் கூடும்.
அதிர்ஷ்டம்
கும்பத்தில் உள்ள ராகு பொக்கிஷத்தைக் கொடுப்பார். மக்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஏழை நாடுகள் பணக்கார நாடாக மாறும். அரபு நாடுகளின் செல்வாக்கு கூடும். மீனத்தில் உள்ள சனி பெயரளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். மின்சார வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். கடல் மாசுவால் பெரிய சேதம் நிச்சயம் உண்டு. கடலால் பெரிய அழிவு ஏற்படும்.
கடல்
அதன் பிறகு தான் உலகம் விழிக்கும். கடலுக்காக சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படும். விசுவாவசு வருடத்தில் ராகு கேது நெருப்பை பிரளயம் செய்வார்கள். நெருப்பாலும் பாதிப்பு அதிகம் ஏற்படும். ரயில் விபத்துகள், விமான விபத்துகள் அதிகம் நடைபெறும். காற்றாலைகள், சாட்டிலைட்களில் தடை ஏற்படும். விவசாயம், கால்நடை, பால் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் புரட்சி ஏற்படும்.
புரட்சி
பல அரிய நோய்களுக்கு எல்லாம் மருந்து கண்டறியப்படும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இந்தியாவில் இருந்து நோபல் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. 18 வருடங்களுக்கு முன்பு இதேபோல ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். தற்போது 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே அமைப்பு உருவாகிறது. இதுவும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications