Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்.. கொட்டும் அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். கார்த்திகையில் நிறைய விசேஷங்கள் நடக்கும். ஐயப்ப பக்தர்கள் லட்சக்கணக்கானோர் மாலை போடும் காலம். கார்த்திகை தீபம் வரும் மாதம். நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் மிகவும் பிரதானமானதாகும். வீட்டில் ஒற்றைப் படையில் தீபமேற்றுவது நன்மை பயக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் சோமவாரம் எனும் திங்கள்கிழமை விசேஷமான காலமாகும். சிவன் கோயிலில் நடைபெறக்கூடிய சங்காபிஷேகத்தில் கலந்துகொள்வது, அபிஷேகத்தில் கலந்துகொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
பரிகாரம்
கடன் குறைய வேண்டும், தேக ஆரோக்கியத்தில் பலம் பெற வேண்டும் என்றால் கோயிலுக்கு பழங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும். கடன் குறைய வேண்டும் என்றால் திங்கள்கிழமை தோறும் பச்சரிசி வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும். பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதத்தில் கன மழை பெய்யும். தமிழகம் முழுவதும் வெள்ளக் காடாக மிதக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த கார்த்திகை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், தொழில், வேலை, படிப்பு, வெளியிடம் என எல்லா விஷயங்களும் அற்புதமாக இருக்கும். சுபகாரியங்கள் அதிகளவில் நடக்கும். பதட்டம் எல்லாம் நீங்கும். மன அழுத்தம் பரிபூரணமாக நீங்கும். உங்களுக்குத் தோன்றுவதை செய்து மகிழ்வீர்கள். பெரிய ரிஸ்குகளை எல்லாம் எடுப்பீர்கள். பெரிய முதலீடுகளைச் செய்வீர்கள்.
தொழில்
பரம்பரை தொழில் செய்பவர்கள் நிறைய ரிஸ்குகளை எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நலனிலும், மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையில் அதிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வயிறு தொடர்பான விஷயங்களைப் பார்த்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
இடது பக்க ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறு உபத்திரவம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒருமுறை உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் பெறும். அற்புதமான அமைப்பு உண்டாகும். துர்க்கை வழிபாடு நல்ல ஏற்றத்தை தரும். பெண் தெய்வ வழிபாடுகள் ஏற்றத்தை தரும். வாராஹி சூழினி, பிரித்யுங்கரா, சர்பேஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்து அற்புதமான பலன்களைத் தரும்.
பெரும் பணம் யோகம்
சபரிமலைக்கு மாலை போடுவீர்கள். சாஸ்தாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். பெரும் பணம் பார்க்கும் யோகம் உண்டாகும். பயணங்கள் சமயத்தில் கவனம் தேவை. ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
கோபம் வேண்டாம்
குடும்பத்தில் தாயிடம், மனைவியிடம், பிள்ளைகளிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. அதேபோல, பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
-
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications