Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வேலையில் அடிக்கும் யோகம்.. வாய்ப்புகள் தேடி வரப்போகுது
Masi Matha Palangal: தை மாதம் நிறைவடைந்து மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு (Rishabam Rasi Palan) கிடைக்கும் முழுமையான பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சிவனுக்கு வழிபாடு செய்வது, ஆராதனை செய்வது, இரவு நேரம் கண் விழித்து சிவனுக்கு செய்யக்கூடிய தொண்டு திருப்தியைக் கொடுக்கும். உங்களுடைய கர்மாக்கள் நிவர்த்தியாகும். இந்த மாசி மாதத்தில் ரிஷப ராசியினருக்கான முழு பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் கிடைக்கும். குரு வக்கிரமாக இருப்பதால் பேராசை அதிகமாக இருக்கும். நிறைய பேருக்கு ஏற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை, தொழில், அந்தஸ்து கிடைக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
கெட்ட காரியம்
மனதில் நல்ல சந்தோஷங்கள் ஏற்படும். ஆனால், திருப்தி மட்டும் ஏற்படாது. எவ்வளவு வந்தாலும் பத்தாது என்கிற நிலை ஏற்படும். பத்தாம் இடம் என்பது கர்ம ஸ்தானம். ரிஷப ராசியில், லக்கினத்தில் பிறந்திருக்கும் நபர்களின் வீட்டில் கெட்ட காரியங்கள் நடக்கலாம். அதற்கு நீங்கள் சென்று வரக்கூடிய நிலை ஏற்படும். நண்பர்கள், உறவுகள், தொலைதூர சொந்தங்கள் வீட்டில் இருந்து கெட்ட செய்திகள் வரும்.
ஏற்றம்
பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். உணவுத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய பொறுப்புகள் வரும். அரசியல்வாதிகள், அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். நிறைய ஏற்றங்களும், நினைத்த காரியங்கள் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் மிகப்பெரிய யோகம் உண்டாகும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பேராசை ஏற்படும் காலகட்டம் என்பதால் சிந்தித்து முடிவெடுப்பது, செயல்படுவது நல்லது. திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் சூப்பராக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications