Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மரண பயம் நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். முழு பரிசோதனைகள் செய்து, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறும் நிலை உண்டாகும். தொழில் மாற்றம், இடமாற்றம், வியாபார மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் ஏற்படும்.
தடைகள் நீங்கும்
மாற்றங்களால் அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும் சூழல் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்களை அதிக அளவில் பெறுவீர்கள்.
சிக்கல் தீரும்
இதுவரை இருந்து வந்த அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். எதிரிகள் விஷயத்தில் பதற்றம் குறையும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான விஷயங்களில் இருந்த மனக் கசப்புகள், சங்கடங்கள் நீங்கும். பதவி உயர்வில் இருந்த பாதிப்புகள் நீங்கும். ரத்த பந்த உறவுகள், பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
பூர்வீகத்தில் சொத்துகள் பிரச்சனைகளில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதனால், பெரிய வெற்றியையும், மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். ரத்தத்தில் பரவும் நோய்கள், லிவர் செயல்பாடுகள் குறித்த பரிசோதனை, கிட்னி செயல்பாடு குறித்த பரிசோதனைகள் எடுத்துக் கொள்வது நல்லது. நிறைய நீர் காய்கறிகள், சூப் சாப்பிடுவது நன்மையைத் தரும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அனைத்து விதமான பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க முருகர் வழிபாடு நல்லது. தொடர்ந்து வழிபாடு செய்து வர செய்து வர ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது, படிப்பது அற்புதமான அமைப்பைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications