சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி: மிதுன ராசிக்கு சூப்பரான காலம் ஆரம்பம்.. ஆனாலும் இதுல மட்டும் கவனம்..!
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இது மிதுன ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது மிதுன ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
மிதுனம்: வேலை, கல்வி தொடர்பாக வெளியூர், வெளி மாநிலம் செல்வதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள், சட்ட சிக்கல்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்வியில் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் இருக்கும். பூர்வீக சொத்துகளில் உள்ள சட்ட சிக்கல்கள் நீங்கி, உங்கள் கைக்கு வந்து சேரும். தந்தை வழி உறவால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு.
முன்னேற்றமான காலகட்டம்
ஒன்பதாம் அதிபதி, பத்தாம் இடத்தில் இருப்பது நல்ல யோகத்தை தரும். வருமானம் உயரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு கூடுதலாகவே வருமானம் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் நிர்வாகத்திறமை நன்கு வெளிப்படும்.
சங்கடங்கள் நீங்கும்
நீண்ட காலமாக சொத்துகளை விற்பதற்கு செய்யும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். விரய செலவும் ஓரளவுக்கு குறையும். உறவினர்கள் இடையே உள்ள மன கசப்புகள் நீங்கி இணைந்து உறவுகள் மேம்படும். கணவன் - மனைவி இடையே இருந்த சங்கடங்கள் நீங்கி புரிதல் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி இணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
அருமையான பண வரவு
பண வரவு திருப்தியாக இருக்கும். ஒன்பதாம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆவதால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இருக்கும். சகோதர, சகோதரிகளிடையே உள்ள பிரச்னைகள் நீங்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் குரு இருப்பது நல்ல பலன்களை தருவார். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: பணி மாற்றத்தில் முடிவு எடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திருமணம் தொடர்பான விவகாரத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சங்கடங்கள் வந்து செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். தந்தை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மனதில் குழப்பங்கள் வந்து செல்லும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications