சனி, குரு ராகு கேது பெயர்ச்சி.. இந்த 2 நட்சத்திரக்காரர்கள் ஒரே வீட்டில் இருந்தால் ஜாக்பாட்
நட்சத்திர பலன்கள்: 2025 வருடத்தில் சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழ்ந்துவிட்டன. இந்த மூன்று பெயர்ச்சிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்களை பெறப் போகும் 4 நட்சத்திரங்களின் பலன்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக 27 நட்சத்திரங்களின் வழியாக தான் அனைத்து கிரகங்களும் பயணிக்கும். சனி முன்னோக்கியும், ராகு கேது கிரகங்கள் பின்னோக்கியும் பயணிக்கும். சனி - ராகு கேது எதிர் எதிரே சந்திக்கும்போது உலகளவில் மிகப்பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு விபரீத ராஜ யோகமும் ஏற்படும்.

தாக்கம்
சனி இப்போதும் பூரட்டாதி நட்சத்திரத்தில் தான் இருக்கிறார். அவர் அடுத்த ஏப்ரல் மாதம் தான் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் சனி கும்ப ராசியை விட்டு சென்றாலும், அவர் குருவின் வீடான மீன ராசியில் தான் இருக்கிறார். அதனால் கும்ப ராசிக்கு உடனடியாக பெரிய மாற்றங்கள் நடந்து விடாது. இன்னும் சிறிது காலம் சனியின் தாக்கம் இருக்கும். சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெறப் போகும் 4 நட்சத்திரங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
திருவோணம்
2025 சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகளிலும் சிறப்பாக இருக்க போகிற நட்சத்திரம் திருவோணம். கடந்த கால கஷ்டங்கள் நிவர்த்தியாகி மிகவும் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். காதல் உறவு கைக்கூடும். கடவுளின் ஆசியால் எல்லாவற்றிலும் நல்ல பலன்களை பெறுவார்கள்.
அஸ்தம், அனுஷம்
2025 ராகு கேது பெயர்ச்சியால் அஸ்தம் மற்றும் அனுஷம் நட்சத்திரங்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். இந்த 2 நட்சத்திரக்காரர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் கோடிகளில் புரள்வதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். அதேபோல விசாகம், பூராட்டாதி, பூசம் ஆகிய நட்சத்திரங்களும் அருமையான பலன்களை பெறுவார்கள். இந்த நட்சத்திரங்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் ஜாக்பாட் அடிக்கும்.
தொழில்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய 3 நட்சத்திரக்காரர்களுக்கு தொழிலில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். சந்திரன் உச்சம் பெற்ற உணவுத் தொழில், தங்கும் விடுதி, எண்ணெய் சம்பந்தப்பட்ட துறை தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நல்ல பலன் கிடைக்கும். அதேபோல வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை, ஐடி துறையில் உத்யோகம், தொழிலில் இருப்போருக்கு ஏற்றம் உண்டு. அவர்களுக்கு உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று திறமைக்கேற்ற அங்கீகாரம் உண்டு.
கவனம்
கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய 3 நட்சத்திரங்கள் இந்த காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கவனமாக இல்லாவிடின் நஷ்டத்தை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. இவர்கள் தங்களது ஜாதகத்தை ஆராய்ந்து உரிய பரிகாரம் மேற்கொள்வது நல்லது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications