சனிப்பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எது தெரியுமா?.. கிடைக்க போகும் பலன்கள் என்ன?
சனிப்பெயர்ச்சி 2025: புத்தாண்டு தொடங்கவுள்ளது. 2025 புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எனும் மூன்று அற்புதமான நிகழ்வுகள் நிகழப் போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் பல ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் மூன்று ராசிகள் எவை, என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் தெளிவாகவும், விரிவாகவும் பார்க்கலாம்... (Sani peyarchi 2025)
ஜோதிடத்தில் நீதிமான், கர்ம காரகன் என அழைக்கப்படுபவர் சனி பகவான். நம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும், ஒவ்வொரு கர்மங்களுக்கும் ஏற்ப நற்பலன்களை அள்ளிக் கொடுப்பவர் சனி பகவான். ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மட்டுமே ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் சிறப்பு வாய்ந்த கிரகமாகும். சனிப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சனி பெயர்ச்சி அடையும்போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை தொடங்குவது வழக்கம். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
ஏழரை நாட்டு சனி என்பது விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என மொத்தம் ஏழரை ஆண்டுகளுக்கு நடக்கும். விரைய சனி என்பது முதல் இரண்டரை ஆண்டுகள் நடக்கும், விரைய சனி அதற்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் நடக்கும், ஜென்ம சனி அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகள் இந்த ஏழரை நாட்டு சனி என்பது நீடிக்கும்.
சனி உச்சத்தில் இருப்பவர்களுக்கு சனிபகவான் பல்வேறு நற்பலன்கள் மற்றும் செல்வங்களை கிடைக்கச் செய்வார். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார் சனி பகவான். தற்போது தனது சொந்த ராசியில் பயணித்து வரும் சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு பல்வேறு நற்பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் தரப் போகிறார் சனி பகவான். எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க...
ரிஷபம் (Sani peyarchi for rishabam): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியாலும், ராசியில் இருந்து குரு விலகுவதாலும் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் ஆண்டாக 2025 புத்தாண்டு அமையும். இதுவரை நிலவி வந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டாகும். அடுத்த ஒரு வருடகாலம் உங்களை யாரும் அசைக்க முடியாது. சனியின் சஞ்சாரம் சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், உங்களுக்கு பெரியளவில் நிதி வரவு உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் தீரும்.
எதிரிகளால் ஏற்பட்டு வந்த அனைத்து இடையூறுகளும் நீங்கும். தொழில், வேலை போன்றவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தடைபட்டு வந்த திருமணங்கள், திருமண வரன்கள் கைகூடி வரும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு நல்ல அனுகூலத்தை தரும்.
துலாம் (Sani peyarchi for thulam): சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சியால் குருவின் ஐந்தாம் பார்வை துலாம் ராசிக்காரர்களின் மேல் விழுகிறது. மதிப்பு, மரியாதை, கெளரவம் உண்டாகும். எந்த செயல்களைச் செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான பார்வை மரியாதை மிக்கதாக மாறம். பொருளாதார மந்தம் சீராகும். பண வரவு உண்டாகும். கடன்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
எத்தனை உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துபவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் உழைப்புக்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும். அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, முன்னேற்றம் உண்டாகும். அனைத்து சவால்களையும் உடைத்து வெற்றி காண்பீர்கள். உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் வரும்.
மகரம் (Sani peyarchi for magaram): மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி நிறைவடைகிறது. இனி தொட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கடன் சுமைகள் நீங்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதித் தேவை பூரணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
எதாவது குறை இருப்பதாகவே மனதில் தோன்றிக் கொண்டிருந்தவை மாறும். உடல் மற்றும் மன அமைதியை மேம்படுத்தும் வகையில் தியானம், யோகா செய்வது நல்லது. சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சியால் இதுவரை நிலவி வந்த அனைத்து தடைகளும் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
துர்கை அம்மன் வழிபாடு மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது அனுகூலத்தை உண்டாக்கும். மனதில் தோன்றும் கவலைகள் நீங்கும். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications