2025 சனிப்பெயர்ச்சி: டாப் 3 ராசியினர்?.. பணம், புகழ், வீடு, மனை யோகம்.. அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேசி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் சிறப்பான யோக பலன்களைப் பெறப் போகும் 3 ராசிக்காரர்கள் யார். என்னவிதமான யோக பலன்களை பெறப் போகிறார்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம்.

12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள். சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் யோக பலன்களை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார். எந்தவிதமான அதிர்ஷ்ட பலன்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் - சனிப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ரிஷப ராசி. லாப ஸ்தானத்தில் சனி இடம்பெறுவதால் தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் அபரிமிதமான லாபத்தைப் பெறுவீர்கள். ரிஷப ராசியில் இருக்கக்கூடிய ஆண்கள் தொழில் உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். முற்றிலும் அந்தப் பிரச்சனைகளில் இருந்து அமைப்பு இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு உண்டாகப் போகிறது. நீண்ட நாட்களாக மன கஷ்டத்தில் இருந்து வந்த பெண்கள் அவற்றில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
அடகு வைத்துள்ள நகைகளை மீட்பீர்கள். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் உங்களிமே வந்து சரணடைவார்கள். புரிதல் இணக்கமாகும் தன்மையை கொடுக்கும். வாழ்வாதாரத்தில் உடன் பிறந்தவர்கள், தாயால் ஏற்பட்டு வந்த பாதிப்புகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். கால் வலி, தைராய்டு, அரிப்பு, எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்திருப்பீர்கள். இவை அனைத்தும் உங்களைவிட்டு அகலும். சொந்த வீடு வாங்கும் அமைப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். நோய் நொடிகளில் இருந்து விமர்சனம் பெறுவீர்கள். குழந்தைகள் படிப்பு விஷயங்களில் அபிவிருத்தி உண்டாகும். ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான விஷயங்களில் இருந்து விடுதலை, நகை அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு.
தந்தை வழி உறவுகள் மூலமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுதலை கிடைக்கும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். முந்தைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். சேமிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தங்கம் பல விஷயங்களில் உங்களுக்கு அபிவிருத்தியை கொடுக்கும். படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
மிதுனம் - மிதுன ராசிக்கு கர்மச் சனி. பத்தாம் இடத்தில் வரும் சனி தொழில் ஸ்தானத்தில் உள்ளார். நெடுநாட்களாக மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வேலை இருந்திருக்காது. தொழில் துறையில் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள். தொழில் ஸ்தானத்தில் தற்போது சனி பகவான் வருவதால் உங்களுக்கு அலைச்சலைக் கொடுத்தாலும் அபரிமிதமான வருமானத்தைக் கொடுக்கும்.
பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே ஆதரவு உண்டாகும். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தகப்பனார் உடல் ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பறவைகளுக்கு தான தர்மம் வழங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அண்ணாமலையாரை வணங்குவது, கிரிவலம் செய்வது நல்ல யோகங்களைத் தரும்
கடகம் - கடக ராசிக்கு பாக்கியச் சனி. கடந்த காலங்களில் கஷ்டப்பட்டு துன்பப்பட்டு வந்தவர்கள் கடக ராசியினர். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் உடல் நிலையில் கடுமையான பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் விமோச்சனம் உண்டாகும். தான தர்மம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தால், குல தெய்வத்தின் அருளால் அனைத்து விதமான பாக்கியத்தைப் பெறுவீர்கள்.
சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பதால் நண்டாவூருக்குச் சென்று சனி பகவானை வழிபடுவது உங்களுக்கு யோகத்தை தரும். ஒரு பங்கு சேமிப்பு, ஒரு பங்கு தானம், ஒரு பங்கு மனைவிக்கு, ஒரு பங்கு குடும்பத்துக்கு என்று செய்வது பலவிதத்தில் உங்களுக்கு பலன்களைக் கொடுக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு அமோகமான பலன்களைக் கொடுக்கும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications