செல்வம் தொழில் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசியினர்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி 2025: திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டில் 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் சனிப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் ராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்துக்கும், கேது பகவான் கன்னியில் இருந்து சிம்மத்துக்கும், சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்கும், குரு ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கும் பெயர்ச்சி அடைகின்றன. 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Sani peyarchi Rasi palan Astrology 2025

சனிப்பெயர்ச்சி என்பது இரண்டரை ஆண்டுகாலம் நடக்கும். சனி என்றாலே எல்லோருக்கும் பயம். சனியை வைத்து மட்டுமே பலன்கள் கணிக்கப்படுவதில்லை. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் யோக பலன்கள் அனுபவிக்கும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் - லாப ஸ்தானத்துக்கு வரும் சனி பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் இதுவரை செய்து கர்மங்களால் நல்ல பலனை அடைவீர்கள். அடுத்த வரும் இரண்டு ஆண்டுகளுக்கு சனியின் பூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் லாபம் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மூதாதையர் வழி சொத்துகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும்.

மகரம் - மகர ராசியினர் ஏழரை சனியில் இருந்து விடுபடுவதால் இனி தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் உங்களுக்கு கைகூடி வரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் வரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், மனக் குழப்பங்கள் மறையும். தெளிவான சிந்தனையைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து லாபத்தைக் காண்பீர்கள். இடமாற்றம் உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்து அனைத்து விஷயங்களையும் இனி படிப்படியாக செய்து முடிப்பீர்கள்.

துலாம் - துலாம் ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து அனைத்து வாய்ப்புகளும் கைகூடி வரும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் தொடங்கும். காது குத்து, திருமணம், வீடு புதுமனை புகுவிழா போன்றவற்றை நடத்தி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். பதவி உயர்வு, உயர்வு பொறுப்பு, சம்பள உயர்வு கிடைக்கும்.

மனதுக்குப் பிடித்தமான தொழில், வியாபாரத்தை தொடங்குவீர்கள். அனைத்துப் பிரச்சனைகளும் உங்களை விட்டு விலகும். உங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அடுத்த இரண்டு வருடத்தில் அனைத்து நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடந்த இரண்டரை காலங்களில் பட்ட கஷ்டங்கள் கடன்கள் அனைத்தும் பனி போல் விலகும். பொருளாதார பிரச்னைகள் சீராகும். குடும்பத்தில் பிரச்னை, நிம்மதியின்மை, காதல் தோல்வி என சொல்ல முடியாத பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள்.

அர்த்தாஷ்டம சனி நிறைவடைவதால் அடுத்த இரண்டு ஆண்டுகள் சொல்லி அடிப்பீர்கள். முன்னேற்றம், வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். புதிய வேலை, வியாபாரம், தொழில் போன்றவற்றில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றத்தை உண்டாக்கும் ஆண்டாக அமையும். ராசிக்கு 9 ஆவது வீட்டில் சனி வருவதால் அனைத்து பிரச்சனைகள், பாதிப்புகள், சவால்கள் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொட்டது துலங்கும். உத்தியோகத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறும்.

வேலை தொடர்பான நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமணம், குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகங்கள் உண்டு. இந்த புத்தாண்டு அனைத்து விதமான பலன்களையும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+