சனிப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு கர்ம சனி.. உத்தியோகம், தொழில் செம அதிர்ஷ்டம்.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு லாப சனிஎப்படி இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தொழில் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் ரிஷப ராசியினருக்கு லாப ஸ்தானத்துக்கு செல்கிறார். இந்த லாப சனியால் மிதுன ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசிக்கு சனி பகவான் பத்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்து வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு பத்தாம் இடத்தில் கர்ம சனியாக தொடரவுள்ளார். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. இடமாற்றம், உத்யோகம், தொழில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்.
இந்த மாற்றங்களால் பல நல்ல பலன்களை பெற போகிறீர்கள். அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் ராகு - கேது பெயர்ச்சியும் நிகழ போகிறது. உங்களின் மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆக உள்ள கேது பகவானாலும் நல்ல பலன்கள் கிடைக்க போகின்றன. மே மாதம் குரு பெயர்ச்சியும் நிகழ இருக்கிறது. இதுவும் மிதுன ராசிக்கு நல்ல பலன்களையே கொடுக்கும்
அதனால் மிதுன ராசியினர் கடந்த காலத்தை நினைத்து குழப்பம் வேண்டாம். நல்லதே நடக்கும் என்ற நேர்மறை சிந்தனையுடன் பயணியுங்கள். கடந்த கஷ்டங்கள் எல்லாம் பனிபோல பறக்க போகிறது. உத்யோகத்தில் பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி பணி மாற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவது அல்லது அதிக லாபம் கிடைக்க கூடிய புதிய தொழில்களை தொடங்க வாய்ப்புள்ளது.
எதிர்பாராத லாபம், அதிர்ஷ்டம் உண்டாகும். பொதுவாக கர்ம சனி உயர்வுக்கான மாற்றங்களையே தரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். சிரமங்கள், சவால்கள் அதிகரித்தாலும்.. அதனால் நல்ல பலன்களும் சேர்ந்தே வரும்.
வண்டி, வாகனத்தில் சற்று கவனம் தேவை. இரவு நேர பயணத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அவ்வபோது மனசச்சரவுகள் வந்து நீங்கும். மின்சாரம், நெருப்பு சார்ந்த விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் காலத்தில் மட்டும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் காரியங்களில் ஆங்காங்கே தடை ஏற்படும். அவ்வபோது மனக்குழப்பம் வந்து நீங்கும். புதன் பகவானுக்குரிய கோயில்கள், பழமையான சிவன் கோயில்களுக்கு செல்வதால் தடைகள் நீங்கி சிறப்பான பலன்களை பெற வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications