சனி பெயர்ச்சி பலன் 2023: யாருக்கு சங்கடம்? 12 ராசிக்காரர்களும் இங்கே போயிட்டு வாங்க
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதால் பலரும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று யோசித்துக்கொண்டுள்ளனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். 12 ராசிக்காரர்களும் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் செல்ல வேண்டிய பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.
மேஷம்: லாப சனி காலம் தொட்டது துலங்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும் என்பதால் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

ரிஷபம்: தொழில் சனி காலம் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.
மிதுனம்: பாக்யசனி காலம் என்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். சொத்துக்கள் சேரும். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
கடகம்: அஷ்டமத்து சனி ஆட்டி வைக்கப்போகிறதே என்ற அச்சம் வேண்டாம். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.
சிம்மம்: கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். சனி பார்வையால் கஷ்டங்கள் தீரும் காலம் வந்து விட்டது. வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனி ஹோரையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். பைரவரை தினமும் வழிபட்டு வர பயம் நீங்கும்.
கன்னி: சனி ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். விநாயகப்பெருமானையும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும் தினமும் வழிபட்டு வருவது நல்லது.

துலாம்: உங்களுக்கு புண்ணிய சனி காலம் என்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும்.
விருச்சிகம்: சனி பகவான் நான்காம் வீட்டில் அர்த்தாட்ஷடம சனியாக பயணம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது. இனி எல்லாமே நல்ல காலம்தான். அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
மகரம்: பாதசனி காலம் என்பதால் கால்களில் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்ப சனியால் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகலாம். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
கும்பம்: ஏழரை சனியில் ஜென்மசனி காலம் என்பதால் செயல்களில் நிதானம் தேவை. பூர்வீக சொத்து விவகாரங்களில் கவனம் அவசியம். தேனி மாவட்டம், சின்னமனு}ர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் பெரிய அளவில் முதலீடு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம்.விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications