விலகிய ஜென்ம சனி.. கும்பம் ராசிக்கு சூப்பர் மாற்றம் தரும் கிரக பெயர்ச்சிகள்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது கும்ப ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். வருகிற மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது கும்ப ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
கும்பம்: கும்ப ராசிக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதன் மூலம் ஜென்ம சனி விலகுகிறது. குரு பகவான் நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் நல்ல அமைப்பு. ஜென்ம ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார். மேலும் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் கேது பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
காதல்
சுப காரியங்கள் நிறைவேறும். குரு பகவான் ஐந்தாம் இடத்துக்கு செல்வதால் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காதல் உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு காதல் உறவு திருமணமாக கைக்கூடும் வாய்ப்பும் இருக்கிறது.
பண வரவு
கடந்த காலங்களில் இருந்த நிதி நெருக்கடி குறையும். பண வரவு திருப்தியாக இருக்கும். எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய இரண்டிலும் நல்ல ஏற்றம் இருக்கும். குழந்தைகளால் பெருமை கொள்வீர்கள்.
தொழில்
உத்யோகத்தில் கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் ஓரளவுக்கு தீரும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபமும் நன்றாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்
பதின் பருவத்தில் இருப்போர் இலக்கை விட்டு தடம் மாறி பயணிப்பதற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்து செல்லும். எனவே வீண் விவாதத்தை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உறவுகளுக்குள் மனக்கசப்பு வந்து செல்லும். வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் நிதானம் அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது மிகவும் நல்லது. முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications