செவ்வாய் பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு கனவிலும் காணாத ஜாக்பாட்.. செவ்வாய் கொடுக்கப் போகும் அதிர்ஷ்டம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூன் மாதத்தில் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாய் என்பது நீதியை நிலைநாட்டக் கூடிய கிரகம். உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு சங்கடமான நிகழ்வுகளும் செவ்வாயால் தான் நடக்கும். எதிரிகள் தொல்லை, கொலை, கொள்ளை, வழக்கு போன்றவை நடப்பதற்கு காரணம் செவ்வாய் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பதுதான். மனிதனுடைய வாழ்க்கையில் சிறைவாசத்தை நிர்ணயிப்பதும், வாகனத்தில் செல்லும்போது மற்றவர்களுடன் பிரச்சனை ஏற்படுத்துவதும் செவ்வாயே.

செவ்வாய் சில இடங்களில் விஷேசமான நற்பலன்களையும், பல இடங்களில் இருந்தால் கெடு பலன்களை ஏற்படுத்துவார். செவ்வாய் கடக ராசியில் நீச்ச ஸ்தானத்தில் இருந்து வெளியே வந்து சிம்ம ராசிக்கு வருகிறார். ஜூன் 6 முதல் ஜூலை 28 வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் இருக்கப் போகிறார். ஜூலை 28 ஆம் தேதிக்கு கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாவதால் சனியின் நேர் பார்வையில் வருகிறார்.
சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டாலே உலகளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் உலகளவில் செல்வாக்கை நிலைநிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். விருச்சிக ராசியில் 10 ஆம் இடத்திற்கு செவ்வாய் வருவதால் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதில், பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில தேவையற்ற செலவுகளையும் ஏற்படுத்தும்.
இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு வண்டி, வாகனங்கள் வகையில், அருவாமனை, கத்தியால் காய்கறிகளை நறுக்கும்போது கூட கவனமாக இருப்பது நல்லது. இந்த செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு என்னவிதமான பலன்களைக் கொடுக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
உங்களுடைய விரையாதிபதி மற்றும் களத்திராதிபதியான செவ்வாய் நீச்ச ஸ்தானத்தை விட்டு வெளியில் வருகிறார். உங்கள் நண்பர்கள், வாழ்க்கைத் துணை, சக பணியாளர்கள் மூலமாக உங்களுக்கு ஏற்பட்ட மனக் குழப்பங்கள் நிவர்த்தியாகும் வாய்ப்பு ஏற்படும். வீடு, மனை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வேலையில் கவனம்
4 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்துக்குச் செவ்வாயின் பார்வை வருவதால், 7 ஆம் பார்வையாக பத்தாம் இடத்தையும் பார்ப்பதால் வேலை விஷயங்களில் சிறிது பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சக பணியாளர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. இதில் நன்மை என்னவென்றால் உங்கள் நண்பர்கள், சகப் பணியாளர்கள் உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். சண்டையே நீங்கள் போட்டாலும் உங்களுடன் அவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
திருமண யோகம்
திருமண வயதினருக்கு திருமணப் பேச்சுவார்த்தையில் இதுவரை தடைகள் இருந்து கொண்டிருந்திருக்கும். இனி அந்த நிலைமை எல்லாம் மாறி திருமண யோகம் கைகூடி வரும். திருமண நிச்சயதார்த்தம் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்குள் ஜூன் 29 ஆம் தேதி விரைய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் வருவதால் திருமண யோகம் கைகூடும். ஜூன் 29 முதல் ஜூலை 26க்குள் திருமணம் கட்டாயம் நடக்கும்.
காதல்
காதலிப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாலினத்தவர்களின் உதவிகளைக் கொண்டு உங்கள் வியாபாரத்திலும், தொழிலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சனி ஜூன் 6 முதல் ஜூலை 28 வரை உங்களுக்கு சாதகமாக செயல்படுவதால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கெளரவத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
பண வரவு அதிகரிக்கும்
குரு உங்களுக்கு பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான சூழல் உண்டாகும். புதனும் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குப் போவதால் நன்மைகள் அதிகரிக்கும். 4 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் தாயாரின் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வயிறு, உணவு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் நிதானமாக இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
4 ஆம் இடத்தில் இருந்து செவ்வாய் 7 ஆம் இடத்தை பார்ப்பதால் இன்ஃபெக்ஷன் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி வாகன சேர்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சிலருக்கு வீடு, மனை சார்ந்த விஷயங்களில் பராமரிப்புச் செலவு வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
குலதெய்வ வழிபாட்டைச் செய்வது நல்லது. முடிந்தளவுக்கு முருகன் வழிபாடு செய்வது வாழ்க்கையில் பல்வேறு விதமான மேன்மையை ஏற்படுத்தும். வேலை சார்ந்த விஷயங்களில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது அற்புத பலன்களைத் தரும். சில அசாதாரண சூழல் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் வராது. மாற்றம், முன்னேற்றத்திற்கான நேரமாக இருக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications