Sevvai Peyarchi: ரிஷப ராசியினருக்கு ராஜயோகம் தரும் 39 நாட்கள்.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
செவ்வாய் பெயர்ச்சி பலன்: 2026 ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் என 39 நாட்கள் செவ்வாய் மகரத்தில் உச்சமடைந்து சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கப் போகிறார். அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய் என்பது சகோதரனை குறிக்கக்கூடிய கிரகம். இடம், நிலம், வீடு, வண்டிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாய். விளையாட்டுத் துறை, மருத்துவர், சீருடைப் பணியாளர்கள், அதிகாரத்துக்குச் செல்ல என எல்லா விஷயங்களுக்கும் செவ்வாய் கிரகம் முக்கியமானதாகும். செவ்வாய் கிரகம் தற்போது மகர ராசியில் உச்சமடைந்து 30 நாட்கள் பலனைத் தரப்போகிறது. அந்த வகையில், இந்த செவ்வாய் பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் உண்டாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருமணம் உறுதி செய்யப்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். திருமணத்திற்கான சாதகமான அமைப்புகள் ஏற்படும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஏற்றம், நல்ல பல அனுகூலங்கள் கிடைக்கும். சொத்து, வேலை, வேலை மாற்றம், கூட்டாளிகள் நன்மை போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பாக்கியம்
கூட்டுத் தொழில் செய்வதற்கான எண்ணங்கள் தோன்றும். கூட்டுத் தொழிலுக்குத் தேவையான அம்சங்கள், பார்ட்னர்ஷிப் விரிவாக்கம் செய்வது போன்றவை அமையும் யோகம் உண்டு. கணவன், மனைவியால் பாக்கியம் கிடைக்கும். திருமணங்கள், சுபகாரியங்கள் செய்யக்கூடிய காலகட்டம் ஏற்படும். சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும். 9 என்பது பாக்கியம், அங்கீகாரம். தேடுதல், கண்டுபிடிப்புகளில் இருப்பவர்களுக்கு விடை கிடைக்கும். பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் யோகம் உண்டாகும்.
பிரச்சனைகள் தீரும்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பம் ஏற்படும். வரும் 27 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நட்சத்தித்தில் செவ்வாய் பயணிப்பதால் தாயைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தாய் வர்க்கம் ரீதியில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ப்பதற்கான சரியான காலகட்டமாக இருக்கும். இடம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். இடத்தின் மீது ஆசைகள் அதிகரிக்கும்.
சுக ஸ்தானம்
வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக ஸ்தானத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் நல்ல காலகட்டமாக இருக்கும். செவ்வாய் பகவான் சந்திரனுடைய நட்சத்திரத்தில் பயணிக்கிறார். 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை திருவோண நட்சத்திரத்தில் பயணிப்பதால் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மங்களகரமான விஷயங்கள் நடக்கும். விற்பனை சார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
வெளிநாடு செல்லும் யோகம்
ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான ஏற்றம் பெறும் காலகட்டமாக இருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தூர தேசப் பிரயாணங்களைச் செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி நன்றாக இருக்கும். வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட விஶயங்களில் வெற்றி ஏற்படும்.
உறவுகள் மேம்படும்
செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான அவிட்டத்தில் பயணிப்பதால் சகோதர உறவுகள் மேம்படும். உங்களால் சகோதரர்களுக்கும், அவர்களால் உங்களுக்கும் நல்ல யோகங்கள் கிடைக்கும். தன பாக்கியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்லவை நடக்கக்கூடிய தன்மை உண்டாகும். சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சீருடைப் பணியாளர்கள், விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு அருமையாக இருக்கும். மருத்துவத் துறையில் ஜொலிக்கும் யோகம் உண்டாகும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிந்தனைகள் நன்றாக இருக்கும். லாபங்கள் கொட்டும்












Click it and Unblock the Notifications