Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் யோகம்
வார ராசி பலன்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களுக்காக எல்லா விதத்திலும் உறவுகள் தாங்கி நிற்பார்கள். மிகப்பெரிய பலமும், நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். உத்தரவாதத்துடன் எடுக்கக்கூடிய பல முடிவுகள் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தித் தரும்.
முன்னேற்றம்
தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து விஷயங்களும் இனி நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். மன அழுத்தம் தீரும். உறவுகளினால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் நல்ல அனுகூலங்கள் காணப்படும். சிக்கல்கள், பாதிப்புகள் எல்லாம் தீரும். அற்புதமான நேரமாக இருக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும்.
தடைகள் நீங்கும்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவுகளில் இருந்த தடைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு எடுக்கக்கூடிய முடிவுகளில் வெற்றி பெறக்கூடிய நல்ல காலகட்டம். நரம்பு, தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
தூக்கமின்மையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குளிர்ச்சியைத் தரக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. தெய்வ சந்நிதானங்களுக்கு சென்று வரும் பிராப்தம் உண்டாகும். சனிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடு, பெருமாள் வழிபாடு, தாயார் வழிபாடு செய்வது இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications