ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் தசராவதி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பிகை பீடம் கும்பாபிஷேகம்
ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகைக்கு 21.12.2020 திங்கட்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு: ஈச்சங்கருணை அடுத்த திருவடிசூலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகைக்கு 21.12.2020 திங்கட்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 17.12.2020 மாலை 7:00 மணி அளவில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. காலை 9:00 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா இனிதே துவங்கியது. 18.12.2020 காலை 8:00 மணி அளவில் லக்ஷ்மி ஹோமம் நடைபெற்றது.

திருவடிசூலம் ஈச்சங்கரணையில் கடந்த 8 ஆண்டுகளுக்க முன்பு ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு சன்னதியாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது.
பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள இங்குள்ள தியான மண்டபம் பக்தர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலுடன், "பைரவமே சுவாசம்" என்பதை உள்ளத்தில் உறுதி பட உணரச்செய்யும் சிறப்புடன் திகழ்கிறது.

இந்த ஆலயத்தின் ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு கட்டிட அமைப்பில் இருப்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய சிறப்புடைய இத்தலத்துக்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில் தற்போது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. குபேர செல்வத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த சன்னதி உள்ளது. அங்கு குபேர குடமும், அஷ்ட லட்சுமிகளும் உள்ளனர். ஸ்ரீகனகதுர்க்கை, ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீபைரவர் பாதரட்சை மண்டபம், ஸ்ரீமகாநந்தி ஆகியவையும் தனித் தனி சன்னதியாக அமைத்துள்ளனர்.
இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள தசராவதி ஸ்ரீ சாமூண்டீஸ்வரி அம்பிகைக்கு 21.12.2020 திங்கட்கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications