விருச்சிக ராசிக்கு சுக்கிரப் பெயர்ச்சியில் அடிக்கும் ஜாக்பாட்.. ரிலேசன்ஷிப்பில் வரும் ஆபத்து.. கவனம்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது விருச்சிகம் ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் விருச்சிகம் ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சுக்கிர பகவான் 7க்கு உரியவர். திருமணம், கூட்டாளி, விரைய ஸ்தானத்தின் அதிபதி. தற்போது குருவோடு சேர்ந்து 8 ஆம் இடத்தில் குருவோடு சேர்ந்து சுக்கிரன் அமரப் போகிறார். சுக்கிரன் 8 இல் மறைவதால் கணவன், மனைவியின் சொத்துகள் கிடைக்கும். வழக்கு, பிரச்சனைகள் சரியாகும். புதிய வேலை கண்டிப்பாக கிடைக்கும். 8 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்தை சுக்கிரன் பார்க்கிறார். மறைவான இடத்தில் இருந்து பண வரவு உண்டாகும்.
பணம் கொட்டும்
பங்குச் சந்தை, லாட்டரி, காப்பீடு, கொடுத்து வைத்த பணம் போன்றவை வரும் அமைப்பு உண்டாகும். குரு 2க்கு உரியவர் தனத்தைக் கொடுக்க கூடியவர். தனத்தில் எந்தவித பிரச்சனையும் வராது. சுக்கிரன், குருவும் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில், வேலையில் பணம் அபரிமிதமாக கிடைக்கும். உங்களுக்கு வேண்டிய, குடும்பத்துக்கு வேண்டிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் அதகரிக்கும் காலம் என்பதால் அதனை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். 8 இல் இரு சுபக் கிரகங்கள் மறைந்திருப்பதால் உங்கள் ஊரை விட்டு வெளியே நகர்த்தும். வேலை, தொழிலுக்காக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கடனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்பு, பகைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிரிகளை விட்டு விலகுவீர்கள்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் 8 இல் மறைந்திருப்பதால் காதலில் இருப்பவர்களுக்கு கருத்து வேறுபாடு வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. ஜூலை 30 ஆம் தேதி வரை செவ்வாய் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் கணவன், மனைவி ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் சண்டை, சச்சரவுகளுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
வீடு வாங்கும் யோகம்
ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் வீடு வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் 8 இல் இருந்து ராகுவோடு நட்சத்திரத்தில் பயணிப்பதால் ஆண்கள் பெண்கள் சார்ந்த விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குரு சுக்கிரன் இணைவால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். ஆனாால், உறவுகள் விஷயத்தில் கவனம் தேவை. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
ஜாக்பாட்
திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட், எதிர்பாராத பணம், நல்ல விஷயங்கள் நடக்கும். ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவது உங்களுக்கு மேன்மையைத் தரும். அல்லது தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். ஏழைகளுக்கு மஞ்சள் பட்டு தானம் கொடுப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications