மகர ராசியில் நுழையும் சூரியன்.. 3 ராசிகளுக்கு கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க
சூரியப் பெயர்ச்சி: மகர ராசிக்குள் நுழையும் சூரிய பகவான் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடமும், மங்களகரமான நல்ல பலனையும் அடைவார்கள். அந்த வகையில், அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
வேத நாட்காட்டியின்படி சூரிய பகவான் ஜனவரி 14 ஆம் தேதி காலை 8.44 மணிக்கு மகர ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி காரணமாகத்தான் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன் தினமாக ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். அதேபோல, சூரிய பகவானின் இடமாற்றமும் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கல்வி, பொருளாதாரம், நிதி, திருமணம், குடும்ப வாழ்க்கை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் யோகமான பலன்களை அனுபவிப்பார்கள்.
ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையும் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரமாகிறார். சூரிய பகவானின் இந்த சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை ஏற்படுத்தப் போகிறது. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் (Mesham rasi palan): மகர ராசிக்குள் சூரிய பகவான் நுழைவதும், பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு பொங்கல் பண்டிகையில் இருந்து நல்ல நேரம் பிறக்கும். அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும் சூழல் உருவாகும். நிதி சார்ந்த விஷயங்களில் லாபம் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான தொழில்கள் கைகூடும். சேமிப்பு, முதலீடு விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.
சிம்மம் (Simmam rasi palan): சூரியனின் இந்த இடமாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரப் போகிறது. மகர சங்கராந்தி நாள் மிகவும் அருமையான நாளாக இருக்கும். தொழில், வியாபாரத்தில், குடும்பத்தில் இருந்த எதிரிகளின் எண்ணங்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகளை எல்லாம் செய்து முடிக்கும் காலமாக இருக்கும். அதன் மூலமாக அனைவரது மத்தியிலும் மதிப்பையும், மரியாதையையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகரம் (Magaram rasi palan): இந்த பொங்கல் நாள் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் காண்பீர்கள். வழக்கு, சட்டம் தொடர்பான விஷயங்களில் உங்ளுக்கு சாதகமான சூழல் ஏற்படும். அதில் வெற்றியையும் காண்பீர்கள். கடன் பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். நிறைவான வருமானம் உண்டாகும். உங்களிடம் நன்றாகப் பழகக்கூடிய அனைவரையும் நம்புவதை தவிர்க்க வேண்டும். வியாபாரம், தொழிலை மற்றவர்களை நம்பி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
-
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications