Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகர ராசியில் சனி உடன் கூட்டணி அமைத்த சூரியன் புதன் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

புதன் பகவான் வக்ர நிலையில் மகர ராசியில் பயணம் செய்கிறார். சூரியன் சனி இணைந்திருக்க எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் முக்கிய கிரகங்களான மூன்று கிரகங்கள் சூரியன்,சனி மற்றும் புதன் இணைந்து மகர ராசியில் பயணம் செய்கின்றனர். ஒரு மாத காலம் மகர ராசியில் சனியோடு இணைந்திருப்பார். எதிரி கிரகங்கள் என்று சொல்லப்படும் சூரியனும் சனியும் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மகர ராசியில் இணைந்திருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

சூரியனின் மைந்தன் சனிபகவான். சனிக்கும் சூரியனுக்கும் ஏழாம் பொருத்தம்தான் எப்பொழுதுமே ஆகாது என்று புராண கதைகள் சொல்கின்றன. இந்த கிரகங்களுடன் புதனும் இணைந்துள்ளார். ஆனால் புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்கிறார்.

மகர ராசியில் ஆட்சி பெற்ற சனியோடு சூரியன் 29ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார். இந்த கிரகங்களின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

பத்தாம் இடம் தொழில் ஸ்தானம் இந்த வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. பணி செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை அதிகாிக்கும். பண வருவாய் திருப்தி தரும். தாய்மாமன் உறவுகளால் நன்மைகள் ஏற்படும். சகோதரர்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

பாக்ய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் செய்யும் தொழிலில் வெற்றி பெறுவீர்கள், பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

வேலை தொழிலில் உற்சாகம் அதிகரிக்கும். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் சஞ்சரிப்பதால் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை கொடுத்து வம்புகளை விலைக்கு வாங்க வேண்டாம். நரம்பு பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்

கடகம்

காதல் உறவில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையக்கூடும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள். உத்யோகத்தில் கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். தம்பதியா் இடையே சின்னச்சின்ன சண்டை வரும். ஈகோ, பிடிவாதம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை அவசியம். வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். திடீர் பண வருவாய் கிடைக்கும். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

கன்னி :

கன்னி :

பண வருவாய் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம் உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும்.

துலாம்:

துலாம்:


உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். வீட்டிற்கு உறவினா் வருகை உண்டு. பணம் வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. தாயாரின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் தேவை. தொழிலில் திடீர் மாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

விருச்சிகம்:

ராசிக்கு மூன்றாவது வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளன. திடீர் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். அதே நேரத்தில் இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவா்களுக்கு திடீர் பிரச்னை ஏற்படும். கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. ஆவணங்கள் தொடர்பான வேலைகளில் கவனமாக இருங்கள்.

தனுசு:

தனுசு:

ராசிக்கு இரண்டாவது வீட்டில் சூரியன், சனி, புதன் என மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் வார்த்தைகளில் கவனம் தேவை. நிதான போக்கை கடைபிடிக்கவும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவருமானமும் சொத்து சோ்க்கையும் உண்டு. உங்களுக்குத் தேவையான உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

மகரம்

உங்கள் ராசியில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வரும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் விழிப்புணர்வு அவசியம். புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதன் பகவானை பாசிப்பயறு வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும். தனிப்பட்ட வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 கும்பம்

கும்பம்

தூக்கமின்மை பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுவீர்கள். வேலைக்காக வெளியூர் செல்லலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும்.

மீனம்

மீனம்


லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீடு மனை நிலம் வாங்குவதற்கான காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொருளாதார சோ்க்கை ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+