Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: கோடியில் புரளும் விருச்சிகம்.. கனவிலும் நினைக்காத அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாகவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு, சனி, ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-viruchigam-sagittarius-peopl

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், விருச்சிகம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த ஆண்டில் அர்த்தாஷ்டம சனி விலகுவது உங்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுக்கும். விருச்சிகத்துக்கு 4 ஆவது வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக சனி இருந்தது. இதனால், தாய், மனை, வீடு, தொழில், வாகனம் விஷயங்களில் பல அலைச்சல்கள் ஏற்பட்டிருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக விட்டுக்கொடுத்து கெட்டுப் போய்விட்டோம் என்று புலம்பி இருப்பீர்கள். அர்த்தாஷ்டமத்தில் இருந்த சனி தற்போது பெயர்ச்சி ஆகியுள்ளதால் பெரிய மாற்றத்தைக் கொடுக்கப் போகிறார்.

பணவரவு அதிகரிக்கும்

வீட்டில் மிகப்பெரிய சுபகாரியம் உண்டாகும். சந்தோஷம், நிம்மதி, குதூகலத்தைப் பார்க்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில் முறை சார்ந்த விஷயங்களில் அதிரடி முடிவுகளை மேற்கொள்வீர்கள். கடந்த காலத்தில் என்னதான் சம்பாதித்தாலும் பணம் இல்லை என்று புலம்பியிருப்பீர்கள். இனி அந்த நிலை மாறும். கட்டுக் கட்டாக பணத்தை கையில் வைத்து செலவை செய்வீர்கள்.

கல்வியில் முன்னேற்றம்

குரு பார்வை இருப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக அதிகரிக்கும். வாக்கு வன்மை உங்களுக்கு அதிகரிக்கும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் நல்ல அங்கீகாரத்தை கொடுப்பார்கள். 3க்கு 4க்குடைய சனி பகவான் குருவின் 5 வது இடத்துக்குப் போகிறார். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பிள்ளைகளால் தொல்லை

பிள்ளைகளால் மன உளைச்சல்கள் உண்டாகும். அவர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த ஆண்டில் வீடு மாறுவதற்கான, வண்டி மாற்றுவதற்கான வாய்ப்பு உண்டாகும். அடுத்த ஒன்றரை வருடம் பயணம் மேற்கொள்ளும் வாழ்க்கையாக மாறும். 4 ஆவது வீட்டில் ராகு வருவதால் வனவாசத்துக்குரிய வாழ்க்கை வாழ்வீர்கள். குடும்பத்தைப் பிரிவதற்கான அதவாது கல்வி, வேலைக்காக செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அவப்பெயர் கவனம்

8 இல் குரு மறைவதால் தேவையில்லாத சொல், அவப்பெயர், பழி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆணாக இருந்தால் பெண்களிடம் பேசும்போதும், பெண்ணாக இருந்தால் ஆண்களிடம் பேசும்போதும் மிக கவனமாக இருப்பது நல்லது. சோஷியல் மீடியாவில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தப்பு செய்யும்போது தப்பித்திருப்பீர்கள். நல்லவராக விலகி செல்லும்போது அவப்பெயர் உண்டாகும்.

வெளிநாட்டு யோகம்

12 ஆவது இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். ஜாமீன் போடுவது, சிபாரிசு செய்வதை தவிர்ப்பது நல்லது. சீராகவும், நிதானத்தோடும் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

எச்சரிக்கை

யாரிடம் பேசினாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அவப்பெயரை ஏற்படுத்தும் காலகட்டமாக இருப்பதால் ஆண்களாக இருந்தால் பெண்களிடம் பேசும்போதும், பெண்களாக இருந்தால் ஆண்களிடம் பேசும்போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.

பெண்கள், மாணவர்கள்

பெண் பிள்ளைகள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செவ்வாயின் ஆதிக்கமாக இருப்பதால் துடுக்காக பேசும் நபர்களாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் எண்ணத்தையும், மனதையும் பக்குவப்படுத்தி நிதானமாக செல்வது நல்லது. அதீத அன்பு, அதீத பற்றை தவிர்ப்பது நல்லது. குரு பார்க்கக்கூடிய இடங்கள் நன்றாக இருப்பதால் பெரிய வளர்ச்சிகள் ஏற்படும். தனியாக போராடும் பெண்களுக்கு மகத்துவமான காலகட்டமாக இருக்கும். கல்வி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும், வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும்.

மதிப்பெண்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 100க்கு 85 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

முருகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். பள்ளியறை பூஜை பார்ப்பது நன்மைகளைத் தரும். கேட்கக்கூடிய விஷயங்களை சாந்த நிலையில் முருகன் வழங்கும் நேரமாக இருக்கும். செவ்வாய், சஷ்டி தினத்தன்று செவ்வரளியை முருகனுக்கு சாற்றி வழிபடுவது நல்லது. வீட்டில் முருகப் பெருமானிடம் 6 தீபங்களை ஏற்றி வழிபடுவது நல்லது. வீட்டின் முன்பக்கத்தில் இரண்டு விளக்குகளை வைப்பது நல்ல பலன்களைத் தரும். வியாழக்கிழமைகளில் கொண்டைக் கடலை சுண்டலை தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+