தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு கோடீஸ்வர யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு துலாம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. துலாமில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசியினருக்கு தொழிலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயங்களில் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதற்கான வாய்ப்புள்ளது. அவசரம், ஆவேசம், கோபம் ஏற்படும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்தி பொறுமை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சனி இந்த ஆண்டு முழுவதும் 6 ஆம் இடத்தில் குரு வீட்டில் இருக்கப் போகிறார்.
குரு பார்வை
குரு பார்வை சனி பகவானுக்கு இருக்கப் போவதால் அற்புதமான ஏற்றங்கள், வெற்றிகள் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வண்டி, வாகனம் மாற்றங்களில் அனுகூலம் ஏற்படும்.
பிரச்சனை நீங்கும்
எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த பல விதமான பிரச்சனைகள் நீங்கும். 5 இல் பூர்வ புண்ணியத்தில் ராகு இருப்பதால் சுவாமி வழிபாடுகளை செய்வது நல்லது. அபிராமி அந்தாதியை கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது.
அனுகூலம்
லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகல் வந்து சேரும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எல்லா உறவுகளுக்கும் நல்லது செய்யக்கூடிய பாக்கியம் ஏற்படும். மிகப்பெரிய ஏற்றம், அனுகூலம் ஏற்படும்.
தொழில், படிப்பில் மாற்றம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்பட்டு பேப்பர் போடுவதை தவிர்ப்பது நல்லது. இன்னொரு வேலையை தயார் செய்துவிட்டு ராஜினாமா செய்வது நல்லது. எந்தவொரு மாற்றம் தொழிலிலும், படிப்பிலும் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. நிறைய நன்மைகள் நக்கும் காலகட்டம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய யோகம் உண்டாகும்.
வழிபாடு
எல்லா சுபகாரியங்களும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். குரு 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணம், நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும். மனதில் இருந்து வந்த பயம் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். நல்ல மருத்துவர்கள், மருத்துவம், ஆலோசனை கிடைக்கும். துலாம் ராசியினர் மேல்மலையானூர் அங்காளம்மன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications