தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு தாயின் உடல்நிலை, வண்டி, வாகனம், வீட்டில் இருக்கும் பிரச்சனை, வாக்குவாதம், சண்டை, வங்கிப் பிரச்சனைகள், அக்கவுண்டில் இருக்கும் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். 4 ஆம் இடத்தில் சனி, அஷ்டமத்தில் குரு இணைந்திருப்பது நல்ல அமைப்பு இல்லை.

tamil-puthandu-rasi-palan-what-kind-of-benefits-will-get-dhanusu-rasi-people-during-this-period

ராகு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அசாத்தியமான வலிமையும், பலத்தையும் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து எப்படியாவது தப்பித்து வருவீர்கள். அஷ்டமத்தில் குரு இருப்பதால் நிறைய பேருக்கு கோர்ட், கேஸ், மெமோ, நோட்டீஸ் வருவது போன்ற அமைப்பு உள்ளது. தேவையில்லாத அரெஸ்ட், மற்றவர்கள் செய்த தப்புக்கு நீங்கள் பதில் சொல்வது போன்ற அமைப்பு ஏற்படும்.

செலவுகள் ஏற்படும்

கார்ப்பரேட்டில் இருப்பவர்கள் அக்கவுண்ட்ஸில் கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகளில் இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்திற்காக நிறைய செலவுகளை செய்யக்கூடிய அமைப்பு உள்ளது. அதிகமான செலவுகளை செய்வீர்கள். சுபவிரயம், ஆடம்பர விரயமாக இருக்கும். கல்விக்காக நிறைய செலவு செய்வீர்கள். நிறைய உழைக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.

வேறு நாடு, மாநிலம், வேறு மொழி பேசும் சமூகத்தின் பக்கத்தில் இருப்பது நன்மையைத் தரும். சுபகிரகங்கள் மறைவதால் சுவாமிக்கு விரதம் இருப்பது நன்மை பயக்கும். வியாழக்கிழமை தோறும் சாய்பாபா, ராகவேந்திரருக்கு விரதம் இருப்பது, இல்லையெனில் திங்கள்கிழமை மட்டும் காலை, இரவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவது நன்மை பயக்கும். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

தானம் அளிப்பது நல்லது

திங்கள்கிழமை தோறும் மதிய வேளைகளில் பெண்களுக்கு தயிர் சாதம் தானம் செய்வது நன்மை பயக்கும். பெரிய மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் வர வேண்டிய பணம் வந்து சேரும். லாட்டரி பணம், காப்பீடு பணம், அரியர் பணம் வந்து சேரும். செகண்ட் ஹேண்டு வண்டி, வீடு, நகைகள் வாங்கும் யோகம்.

வழக்குகளை செட்டில்மென்ட் செய்வீர்கள். உறவுகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தப்பான சேர்க்கை, தப்பான விஷயங்களை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களால் முடியும், முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டாம். மற்றவர்களுக்காக சிபாரிசு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அண்ணன், தம்பியுடன் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

பரிகாரம்

தொடர்ந்து அன்னாதானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்கள் எல்லாம் தீரும். கிரெடிட் கார்டுகளை அடைத்து முடிப்பீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வது தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு 80 சதவீதம் நன்றாக இருக்கும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெரியவர்களை அவமானப்படுத்தாமல், சாபம் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பிள்ளைகளைத் திட்டாமல் இருப்பது நல்லது. பசுமாடுகளுக்கு தானம் கொடுப்பது நன்மை பயக்கும். பெளர்ணமி, அமாவாசை தினத்தன்று பசு மாடுகளை வழிபாடு செய்வது தானம் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+